அமெரிக்கா பாடகி ரிஹானா பாகிஸ்தானியா?? இஸ்லாமியரா?? கூகுளில் தேடிவரும் இந்தியர்கள்!!

0

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது கருத்தை வெளியிட்டார் ரிஹானா. தற்போது அவரை எதிர்த்து பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் ரிஹானா பாகிஸ்தானியா?? என்றும் இஸ்லாமியரா?? என்றும் இந்தியர்கள் கூகுளில் தேடி வருகின்றனர்.

ரிஹானா:

கடந்த இரண்டு மாத காலமாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது டெல்லியில் இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி அமேரிக்கா பாப் பாடகி ரிஹானா தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் ஏன் பேசவில்லை? என்று குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் இந்தியாவில் நேற்று முதல் ரிஹானா ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரை தொடர்ந்து வெளிநாட்டு நடிகை மியா கலிஃபா போன்றோர்களும் இது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது ரிஹானாவின் பதிவுக்கு மறைமுகமாக கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின், கோஹ்லி, ரெய்னா, ரோஹித் போன்றவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் நம் பிரச்சனைக்கு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் நல்ல முடிவாக எடுப்போம் என்று கூறியுள்ளனர். மேலும் ரிஹானாவின் பதிவுக்கு பாலிவுட் நடிகை கங்கனா காரசாரமாக பதிலளித்திருந்தார்.

தனது அத்தையின் சதித்திட்டம் தெரிந்து வீட்டை விட்டு துரத்தும் மீனா – பல சம்பவங்களுடன் வெளியான ப்ரோமோ!!

தற்போது இந்தியா முழுவதும் ரிஹானா பற்றிய பேச்சுவார்த்தைகள் தான் போய்க்கொண்டிருக்கிறது. மேலும் ரிஹானாவை பற்றி தெரியாதவர்கள் கூகுளில் ரிஹானாவை பற்றி தேடி வருகின்றனர். ஆனால் இந்தியர்கள் தேடும் விதம் சற்று வித்யாசமாக இருந்து வருகிறது. ஏனென்றால் இந்தியர்கள் ரிஹானா பாகிஸ்தானியா என்றும் ரிஹானா இஸ்லாமியரா என்றும் கூகுளில் தேடி வருகின்றனர். தற்போது கூகுளில் அதிக தேடப்பட்ட பதிவுகளில் இந்த இரண்டு பதிவு தான் இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here