விஜய் டிவியில் மீண்டும் இணையும் சின்னத்திரை ஜோடி – ரசிகர்கள் உற்சாகம்!!

0

சின்னத்திரை நடிகர் அஸீமுடன் பிக்பாஸ் புகழ் ஷிவானி புதிய சீரியலில் மீண்டுமாக இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இருவரின் ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகள் உருவாகியுள்ளது.

அஸீம் மற்றும் ஷிவானி

விஜய் டிவியில் இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஒளிபரப்பான தொடர் ”பகல் நிலவு”. ஆரம்பத்தில் வெவ்வேறு கதை களத்துடன் ஆரம்பித்த இத்தொடர் முடியும் போது பெரிய அளவு ரசிகர்களை உருவாக்கிய காரணம் ஷிவானி – அஸீம் ஜோடி. ‘பகல் நிலவு’ தொடரின் போது இருவரும் இணைந்து ”ஜோடி ஃபன் அன்லிமிடட்” என்ற நடன போட்டியிலும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் உண்மையான காதலர்களா என்று கேட்கும் அளவிற்கு இருவருக்கும் இடையில் நெருக்கம் காணப்பட்டது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

‘பகல் நிலவு’ தொடர் முடிந்ததும் இருவரும் வெவ்வேறு தொடரில் நடிக்க ஆரம்பித்தனர். தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஷிவானி போட்டியாளராக கலந்து கொண்டார். நடிகர் அஸீமும் வைல்ட்கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதாக அவர் அறிவித்திருந்த நிலையில் சில காரணங்களுக்காக அவரால் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.

பிப்ரவரி 8ம் தேதி சசிகலா தமிழகம் வருகை – டிடிவி தினகரன் அறிவிப்பு!!

இரண்டு நாளைக்கு முன்பு, நடிகர் அஸீம் தனது மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஷிவானி – அஸீம் இடையேயான காதல் தான் இவரது விவாகரத்துக்கு காரணம் என்றெல்லாம் கிசுகிகிசுக்கள் வெளிவந்தது. என்றாலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகப்போகும் புதிய தொடர் ஒன்றில் அஸீம் மாற்றும் ஷிவானி இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here