சசிகலாவிற்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க ஏற்பாடு – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!!

0

தற்போது அடுத்த வாரம் சசிகலா தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு அவரை வரவேற்கும் வகையில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்க மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார்.

சசிகலா:

சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2017ம் ஆண்டு சிறை சென்ற சசிகலா கடந்த 27ம் தேதி அன்று விடுதலை செய்யப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் அவர் பெங்களுரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது உடல் நலமானதால் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களுருவில் உள்ள தனது இல்லத்தில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் வரும் 7ம் தேதி அன்று அவர் தமிழகம் வரவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தினகரன் அறிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை முன்னிட்டு சசிகலாவின் வரவேற்பிற்காக குடியாத்ததின் முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் ஓர் ஏற்பாடு செய்ய தயாராகினர். ஜெயந்தி பத்மநாபன் இவர், ஜெயலலிதா மறைவிற்கு பின்பு சசிகலா உடன் சேர்ந்தார். இதனால் இவர் உட்பட 18 எம்எல்ஏக்களின் பதவி பறிபோனது. பின்பு இவர் குடியாத்தம் தொகுதியில் அமமுக கட்சி சார்பில் போட்டி இட்டு தோல்வியை சந்தித்துள்ளார். இவர் தற்போது வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஓர் மனு அளித்துள்ளார்.

தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து – ஒய் பிளஸ் பாதுகாப்பு!!

அது என்னவென்றால், வருகிற 7ம் தேதி சசிகலா வருகைக்கு ஹெலிக்ப்ட்டர் மூலம் மலர்களை தூவி அவரை வரவேற்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது வரை இதன் முடிவு பற்றிய தகவல் வெளியாகவில்லை. மேலும் இந்த கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் சசிகலா வருகை தேதி 7ம் தேதியில் இருந்து 8ம் தேதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று தினகரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here