முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
vijay sethupathi
vijay sethupathi

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் ரிலீஸுக்காக அவரது ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவர் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய படத்தில் நாயகனாக நடிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது அந்த பட நிறுவனம்.

விஜய் சேதுபதி

தற்போது தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆரம்பத்தில் பல திரைப்படங்களிலில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பார். தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் ஒரு ஓரமாக நடித்திருப்பார். அவரின் தொடர் முயற்சியால் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். மக்கள் மத்தியில் மக்கள் செல்வனாக வாழ்ந்து வருகிறார்.

vijay sethupathi
vijay sethupathi

இவரின் நடிப்பிற்கு மட்டுமல்ல, குணத்திற்கும் ரசிகர் பட்டாளம் அதிகம். ஆடம்பரத்தை விரும்பாத விஜய் சேதுபதி எந்த நிகழ்ச்சி என்றாலும் சிம்பிளாக தான் வருவார். முதன் முதலில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் பர்ஸ்ட் லுக் செம வைரலானது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

master
master

ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் தற்போது லாக்டவுன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எப்பொழுது வெளிவரும் என்று மக்களும் காத்திருக்கின்றனர். மேலும் அவர் ஸ்ருதி ஹாசனுடன் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்துள்ளது.

vijay sethupathi and shruthi
vijay sethupathi and shruthi

இந்நிலையில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இதனை அப்படத்தை தயாரிக்கும் டிஏஆர் மோஷன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமான அறிவித்துள்ளது. இப்படத்திற்கு 800 என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

vijay sethupathi
vijay sethupathi

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் முத்தையா முரளிதரன். இதன் காரணமாக 800 என்று பெயர் வைக்கப்படுவதாக கூறுகின்றனர். டிசம்பர் மாதம் இதற்கான படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளன. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதனை விஜய் சேதுபதி கண்டுகொள்ளவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here