4,500 ரூபாய்க்கு BMW G 310 R & G 310 GS இந்தியாவில் அறிமுகம் – பைக் பிரியர்கள் உற்சாகம்!!

0

பிஎம்டபிள்யூ நிறுவனம் G 310 R & G 310 GS பிஎஸ் 6 மாடல்களை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பைக் பிரியர்கள் அதிகம் எதிர்பார்த்த அட்வென்சர் மாடலின் விலை குறைக்கப்பட்டு உள்ளதால் அதிகளவு விற்பனையாகும் என கூறப்படுகிறது. மேலும் BMW சார்பில் சிறப்பு மாதத்தவணை திட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது கூடுதல் சிறப்பு.

BMW G 310 R & G 310 GS:

ஸ்ட்ரீட் ரைடர் பைக் பிரியர்களுக்கு BMW G 310 R சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். அட்வென்சர், லாங் ரைட்ஸ் செல்ல G 310 GS வசதியாக இருக்கும். பிஎஸ் 6 என்ஜின், கிராபிக்ஸ் ஸ்டிக்கர், ஹெட்லைட், சைலன்சர் என பலவித மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் போன்களை ப்ளூடூத் உடன் இணைக்கும் வசதி, பிரத்யேக செயலி, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் லிவர் என இளைஞர்களை கவரும் பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டு உள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

313 சிசி பிஎஸ் 6 என்ஜின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் வழங்கக்கூடியது. அதிகபட்சமாகி மணிக்கு 143 கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்தது. ஸ்லிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டு உள்ளது கூடுதல் சிறப்பு. பிரேக்கிங்கை பொறுத்தவரை டூயல் சேனல் ABS உடன் வந்துள்ளது.

ராயல் என்பீல்ட்க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டா CB 350 – கவலையில் RE கிளாசிக் ரசிகர்கள்!!

மோனோ ஷாக் அப்சாபருடன் ட்ராக்ஷன் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்ற அதிரடி பாதுகாப்பு அம்சங்களும் தரப்பட்டு உள்ளது.

இதன் முந்தைய மாடல்கள் எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகாத காரணத்தால், பிஎஸ் 6 மாடலின் விலை 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைக்கப்பட்டு உள்ளது. BMW G 310 R – ரூ.2.45 லட்சம் (எக்ஸ்ஷோரூம்), G 310 GS – ரூ.2.85 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) என விற்பனை வந்துள்ளது. BMW நிறுவனத்தின் சிறப்பு கடன் மூலம் மாதம் ரூ. 4,500 தவணை திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பைக்குகளை ரூ.50,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here