போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் 2020 – முகேஷ் அம்பானி 13வது முறையாக முதலிடம்!!

0

2020ம் ஆண்டிற்கான இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் தொடர்ந்து 13வது முறையாக முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அவரது சொத்து பல மடங்கு உயர்ந்துள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள்:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி ஃபோர்ப்ஸ் தொடர்ந்து 13 வது ஆண்டாக இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். அம்பானியின் தனிப்பட்ட தற்போதைய நிகர சொத்து ரூ.6,56,000 கோடியாக உள்ளது. உலகின் டாப் தொழில்நுட்ப நிறுவனங்களான பேஸ்புக், கூகிள் மற்றும் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் ஆகியவற்றில் முதலீடு செய்ததன் மூலம் அம்பானியின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

நடப்பு நிதியாண்டில் அதிகம் கடன் பெற்ற மாநிலம் – தமிழகம் முதலிடம்!!

டாப் 10 பணக்காரர்களில் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சைரஸ் பூனவல்லா முதல் முறையாக இடம் பிடித்தார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளராக இந்நிறுவனம் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 இந்திய பணக்காரர்கள்:

1. முகேஷ் அம்பானி – ரூ. 6,50,000 கோடி
2. கவுதம் அதானி – ரூ. 1,86,400 கோடி
3. சிவ நாடார் (HCL நிறுவனர்)
4. ராதாகிசன் தமானி (AVENUE சூப்பர் மார்க்கெட் நிறுவனர்)
5. இந்துஜா சகோதரர்கள் (அசோக் லைலேண்ட் நிறுவனர்)
6. சைரஸ் பூனவல்லா (சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனர்)
7. பல்லோன்ஜி மிஸ்திரி
8. உதய் கோடக்
9. கோத்ரெஜ் குடும்பம்
10. லட்சுமி மிட்டல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here