ஒரே மாதத்தில் முடி கொட்டுவதை நிறுத்த வேண்டுமா?? சூப்பர் டிப்ஸ் இதோ!!

0
hair growth
hair growth

இப்பொழுது இருக்கும் தலைமுறையில் பலருக்கும் முடி உதிர்வு பிரச்சனைகள் அதிகம் இருக்கும். இதனை தவிர்க்க பல ஷாம்பூகளை நாம் பயன்படுத்துகிறோம். இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. மேலும் தலைமுடி வேர் பகுதியில் மட்டுமே முடி உதிர்வை தவிர்க்க முடியும். இப்பொழுது முடி உதிர்வை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

முடி உதிர்வு:

அழகு என்பதில் தலைமுடிக்கும் முக்கிய பங்கு உள்ளது. முடி வேர்களில் ஆரோக்கியம் இல்லாத போது முடிகள் உதிர ஆரம்பிக்கும். இதனால் அழகும் கெட்டு விடுகிறது. விரும்பிய ஹேர் ஸ்டைல் செய்ய முடியாமல் போகிறது. இதற்கு உடலில் இருக்கும் அதிக வெப்பநிலை கூட காரணமாக இருக்கலாம். மேலும் தலை வறட்சியாக இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படும்.

hair growth
hair growth

இரவு அதிக நேரம் முழித்திருப்பது, தூக்கமின்மை, தலைக்கு எண்ணெய் தேய்க்காமல் இருப்பது போன்றவை முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் புரோட்டீன் சத்துக்கள் இல்லாமல் போனாலும் முடி உதிர்வு ஏற்படும். இப்பொழுது முடி உதிர்வை தடுக்க என செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

hair oil ingredients
hair oil ingredients

தேங்காய் பால்

சிகைக்காய்

கடலை மாவு

தயிர்

நெல்லிக்காய்

தேங்காய் எண்ணெய்

முட்டை

வழிமுறைகள்

முதலில் தேங்காய் பாலை லேசாக சூடு படுத்தி இரவு தூங்கும் போது தலைமுடி வேர்களில் மசாஜ் செய்து தலையில் பிளாஸ்டிக் கவரை கட்டி தூங்க வேண்டும். காலையில் எழுந்ததும் சிகைக்காய் தூள், கடலை மாவு, தேங்காய் எண்ணெய் அரைத்த கருவேப்பிலை, முட்டை வெள்ளைக்கரு மற்றும் தயிர் சேர்த்து முடியின் வேர் வரை மெதுவாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். 2 மணி நேரம் கழித்து ஷாம்பூ சேர்த்தோ அல்லது சிகைக்காய் சேர்த்தோ தலை முடியை அலசவும்.

hair
hair

அதன்பிறகு நெல்லிக்காயை சிறிதாக நறுக்கி அதில் தேங்காய் எண்ணெயை சேர்த்து அதனுடன் கறிவேப்பிலையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்து ஷாம்பு போட்டு மறுபடியும் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு மாதத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முடி வேர் வலுவடைந்து முடி கொட்டுதலை தவிர்க்கலாம். மேலும் தலையில் உள்ள பொடுகு நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here