அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் – ஆணையர் எச்சரிக்கை!!

0

குளிர் காலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடையும் என்பதால் அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐஏஎஸ் அவர்கள் எச்சரித்து உள்ளார். சென்னையில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா தடுப்பு முகாமை ஆய்வு செய்த பிறகு இவ்வாறு கூறினார்.

கொரோனா பரவல்:

தமிழகத்தின் பிற பகுதிகளில் சற்று குறைந்துள்ள கொரோனா பாதிப்பு, தலைநகர் சென்னையில் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால் ஆங்காங்கே தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. இவ்வாறாக SSK நகர் முகாமை சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி பிரகாஷ் ஆணையர் பிரகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பிரகாஷ், 57 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் மூலம் இதுவரை 30 லட்சம் பேர் பயன்பெற்று உள்ளதாக தெரிவித்தார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இதுவரை சென்னையில் 20 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்த ஆணையர் அவர்கள், அடுத்த 3 மாதத்திற்கு பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் இலவச முகக்கவசம் விநியோகம் குறித்தும் விளக்கம் அளித்தார்.

நடப்பு நிதியாண்டில் அதிகம் கடன் பெற்ற மாநிலம் – தமிழகம் முதலிடம்!!

பின்னர் சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் கூறுகையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றை 10% குறைக்கும் நோக்குடன் அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here