நடப்பு நிதியாண்டில் அதிகம் கடன் பெற்ற மாநிலம் – தமிழகம் முதலிடம்!!

0

ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்களின் படி, நடப்பு நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, வருவாய் இழப்பு போன்ற காரணங்களால் அரசுக்கு ஏற்பட்ட நிதி பற்றாக்குறையை சமாளிக்க கடந்த 6 மாதங்களில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வாங்கியது தெரிய வந்துள்ளது.

தமிழகம் முதலிடம்:

கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பை சரி செய்ய இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம் என உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. கொரோனாவிற்கு சரியான தடுப்பூசி இன்னும் கண்டறியப்படாத நிலையில் தொற்று எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது நடப்பு நிதியாண்டில் அதிக கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அதில் கடந்த 5 மாதத்தில் மட்டும் ரூ.50,000 கோடி கடனாக பெற்று தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு மத்திய அரசிடம் இருந்து போதிய நிதி கிடைக்காதது, ஜிஎஸ்டி இழப்பீடு தொகை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான செலவு போன்றவை முக்கிய காரணமாக உள்ளது. ஊரடங்கு காலத்திலும் அதிகப்படியான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அரசுக்கு செலவு அதிகரித்தது.

ஜாதி மறுப்பு திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ – மனைவியை நேரில் ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு!!

மேலும் பல மாதங்களாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் அரசுக்கு வரி வசூல் குறைந்து கடும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் செலவுகளை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 107% அதிகமான கடனை தமிழக அரசு பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. நடப்பு பட்ஜெட்டில் 1 ஒரு வருடத்திற்கு ரூ.56 ஆயிரம் கோடி கடன் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here