ஜாதி மறுப்பு திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ – மனைவியை நேரில் ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு!!

0

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட எம்எல்ஏ பிரபு அவர்கள் தனது மனைவியை நாளை மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளார். சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

ஜாதி மறுப்பு திருமணம்:

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக எம்எல்ஏ.,வாக இருப்பவர் பிரபு. இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது சௌந்தர்யா எனும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். 39 வயதான பிரபு, 19 வயது மாணவியை திருமணம் செய்து கொண்டது பற்றி மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் திருமணம் நடந்த வீட்டின் முன்பு பெண்ணின் தந்தை சுவாமிநாதன் தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

சுவாமிநாதனை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பிரபு ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி தனது மகளை திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் அளித்திருந்தார். இதற்கிடையில் எம்எல்ஏ பிரபு தன்னை ஏமாற்றவில்லை என்றும், இருவரும் முழு மனதுடன் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சௌந்தர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

பெண்ணின் தந்தை தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் தீர்ப்பளித்த நீதிபதி, எம்எல்ஏ பிரபு நாளை மதியம் தனது மனைவி சௌந்தர்யாவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here