பைசா செலவில்லாமல் வீட்டிலேயே ‘கோல்டன் ஃபேசியல்’ – இதோ உங்களுக்காக!!

0
golden facial
golden facial

இன்று உள்ள காலகட்டத்தில் பார்லர் போகாத பெண்களே கிடையாது. பார்லருக்கு சென்று அதிக பணத்தை வீணாக்குகின்றனர். பார்லரில் செய்யும் ஃபேசியல் தற்காலிகமானது மட்டுமே. இப்பொழுது பார்லரில் செய்யப்படும் கோல்டன் ஃபேசியல் வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என பார்க்கலாம்.

கோல்டன் ஃபேசியல்:

நாம் முகத்திற்கு பயன்படுத்தும் கிரீம் வகைகள் அதிக கெமிக்கலை கொண்டதால் தான் முகத்தில் உடனடியாக பளிச்சென்று மாற்றுகிறது. மேலும் இது நிரந்தரமான தீர்வு கிடையாது.

golden facial
golden facial

முடிந்த வரை நாம் இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்தால் கட்டாயமாக முக அழகை பராமரிக்க முடியும். 40 வயதிலும் இளமையாக ஜொலிக்கலாம். தற்போது பார்லரில் செய்யும் கோல்டன் ஃபேசியல் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

golden facial
golden facial

கடலை மாவு

மஞ்சள்தூள்

தேன்

பாதாம் பவுடர்

சந்தன பவுடர்

பால்

சர்க்கரை

கற்றாழை

ஆலிவ் எண்ணெய்

ரோஸ் வாட்டர்

செய்முறை

  • முதலில் முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு கழுவிக் கொள்ளவும். இப்பொழுது ஒரு பஞ்சை எடுத்து பாலில் நனைத்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்களுக்கு பிறகு முகம் நன்கு காய்ந்ததும் ஈர துணியால் முகத்தை துடைக்க வேண்டும்.
golden facial
golden facial
  • அதன் பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து அத்துடன் தேன் சேர்த்து முகத்தில் 5 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மறையும்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

  • அடுத்ததாக கடலை மாவு, சந்தன பவுடர், பாதாம் பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவ வேண்டும். இதனால் முக துவாரங்களில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.
golden facial
golden facial
  • இப்பொழுது அடுத்ததாக கற்றாழை ஜெல், ஆலிவ் ஆயில், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்பொழுது 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவவும்.
  • அடுத்ததாக பால் கடலை மாவு, மஞ்சள் தூள், தேன் இவற்றை கலந்து முகத்தில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவ வேண்டும். இந்த கோல்டன் ஃபேசியலை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முகம் பளபளக்கும். கன்னத்தில் பருக்களால் ஏற்பட்ட குழிகளும் மறையும். எதாவது நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றால் 1 வாரத்திற்கு முன்னதாகவே இந்த கோல்டன் ஃபேசியலை செய்தால் நல்ல பலனை பெறலாம். மேக்கப் போட வேண்டிய அவசியமும் இருக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here