விஜயுடன் பூஜா ஹெக்டே நெருக்கமாக இருக்கும் ஷூட்டிங் புகைப்படம் – தளபதி 65 மாஸ் அப்டேட்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் விஜய் தற்போது தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் 65

தமிழ் மக்களின் தளபதியாக இருக்கும் விஜய் தற்போது தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்திற்கு இருந்து வந்த வரவேற்பை விட தற்போது தளபதி 65 என்ற பெயரிடப்படாத படத்திற்கான அப்டேட்காக மக்கள் பலரும் காத்துக்கொண்டுள்ளனர். மாண்புமிகு மாணவன் என்ற படத்தில் ஆரம்பித்து தற்போது மாஸ்டர் வரை அவரது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். இளைய தளபதி என்றாலே உயிரை கொடுக்கும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மாஸ்டர் பட நிலுவையிலேயே ரசிகர்கள் காண்டாக தான் செய்தார்கள். லேட்டாக வந்தாலும் மாஸ்டர் திரைப்படம் அல்டிமேட்டாக மாஸ் காட்டியது. ஆனால் மாஸ்டர் படம் வரும் முன்னரே தளபதி 65 அப்டேட் வர ஆரம்பித்து விட்டது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். தற்போது சிறிய இயக்குனர்களுக்கும் விஜய் வாய்ப்புகளை கொடுத்து வருகிறார். விஜய் படம் என்றாலே ஒரு சஸ்பென்ஸ் வைத்து ரசிகர்களுக்கு ஆவலை ஏற்படுத்தி விடுகின்றனர். இதனாலேயே படம் வெளி வரும் போது மெகா ஹிட் அடித்து விடுகிறது.

‘எங்க தலைவி களம் இறங்கிட்டாங்க’ – சைடு போஸில் கலக்கும் ரம்யா பாண்டியன்!!

அதே போல் தான் நெல்சன் இயக்கும் தளபதி 65 திரைப்படம். இந்த படத்தில் தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதையும் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. மேலும் இதில் ஸ்பை ஏஜென்ட்டாக விஜய் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் இணையத்தில் வலம் வந்தது. தற்போது விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அப்படி பார்த்தால் விஜய்யின் இந்த படத்தில் பல ரொமான்ஸ் காட்சிகளும் நமக்காக காத்துக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here