‘ ஹாப்பி பர்த்டே தங்கமே’ – நயன்தாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்!!

0
nayanthara-Vignesh-
nayanthara-Vignesh-

தமிழ் திரையுலகில் தற்போது வரை தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா. இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நயன்தாரா

தமிழில் வெளியான ஐயா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நயன்தாரா. என்ன தான் இவர் கேரள பெண்ணாக இருந்தாலும் அவருக்கு பெயரும் புகழும் பெற்றுத் தந்தது தமிழ் திரையுலகம் தான். இதுவரையிலும் தனது ரசிகர்களை அவரது அன்பால் கட்டிவைத்துள்ளார் என்றே சொல்லாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

nayanthara

திரையுலகில் நயன்தாரா எண்ணற்ற பிரச்சனைகளை கடந்து வந்துள்ளார் என்றே சொல்லலாம். பலரும் இவரை என்ன தான் கேவலமாக பேசினாலும் எதையும் காதில் வாங்காமல் தற்போது வரை தனது குறிக்கோளிலேயே கவனம் செலுத்தி முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

முதலில் பிரபு தேவாவை காதலித்து வந்ததாக பல வதந்திகள் வெளியானது. இதனால் பல பிரச்சனைகளும் உருவானது. தற்போது அதையெல்லாம் கடந்து தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சில காலமாக முக்கிய வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார் நயன்தாரா.

Nayanthara and vignesh sivan

தற்போது பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை, நயன்தாரா காதலித்து வருகிறார். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வது, போட்டோஸ் வெளியிடுவது என தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கூட கோவாவில் விமர்சையாக கொண்டாடினர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இன்று நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவரது நெற்றிக்கண் படத்தின் டீஸர் வெளியானது. பல திகில் காட்சிகளுடன் டீஸர் வெளியாகி இருந்தது. மேலும் தற்போது நயன்தாராவின் பிறந்த நாளுக்கு விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது புகைப்படத்தை வெளியிட்டு ‘ஹாப்பி பர்த்டே தங்கமே’ என்று கேப்சன் வேறு வைத்துள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here