313 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சீட் – அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்!!

0

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், இந்த கல்வியாண்டில் 313 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். யாரும் கோரிக்கை வைக்காமல் அரசு சார்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உளளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மருத்துவ படிப்பு:

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே மருத்துவ படிப்புகளில் ஏழை அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்வது என்பது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. டாக்டர் ஆக வேண்டும் என்கிற கனவுடன் படிக்கும் மாணவர்கள், 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெரும் போதிலும், நீட் தேர்வில் அதிக மதிபெண்கள் பெற முடியாத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் பல தற்கொலை சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

medical counselling started in tn
counselling

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்தனர். அதுமட்டுமின்றி அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5% உள் இடஒதுக்கீடு பெறும் சட்ட வரைவிற்கும் ஆளுநர் அனுமதி வழங்கினார். இந்நிலையில் இன்று சென்னையில் மருத்துவ நேரடி கலந்தாய்வு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

edapadi palanisami
Tamilnadu CM

இதில் கலந்து கொண்டு மருத்துவ படிப்பில் இடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, சேர்க்கை ஆணை மற்றும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உரையாற்றினார். அதில் ‘இந்த நாள் தமக்கு மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளது. பல தடைகளையும் தாண்டி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது. அரசுப்பள்ளியில் படித்தவன் என்பதன் பேரில் நான் பெருமைப்படுகிறேன். தமிழகத்தில் 12ம் வகுப்பு பயிலும் 49% மாணவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கின்றனர்’ என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here