ஒரே வாரத்தில் முடி உதிர்வை நிறுத்தி இழந்த முடியை திரும்ப பெற – சூப்பர் டிப்ஸ் இதோ!!

0

தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு. இனி முடி உதிர்கிறதே என்று கவலை வேண்டாம். முடி உதிராமல் இருப்பதற்காக பல வழிகளை பின்பற்றியும் பலன் இல்லாமல் போனதா?? இதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைபாடுதான். நாம் என்னதான் விதவிதமான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் முடி கொட்டுதல் நிற்கவில்லை என்றால் நம் உணவுகளில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முடி உதிர்வதற்கான காரணம் என்ன?

மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கூந்தலை சரியாக பராமரிக்காமல் இருப்பது & தைராய்டு இருக்கும் பெண்களுக்கு அதிகமாக தலைமுடி உதிரும். நம் உடலில் தேவையான இரும்புச் சத்து இல்லை என்பதால் முடி அதிகமாக கொட்டுகிறது. இரவில் அதிக நேரம் தூங்காமல் கண் விழித்திருப்பது கூந்தல் வளர்ச்சியை பாதிக்கும். அதிகமாக செல்போன்கள் மற்றும் கணினிகளை பயன்படுத்தும் போதும் முடி உதிரும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு வெளிப்புறமாக என்ன தான் ஆயில் மற்றும் ஷாம்புக்களை பயன்படுத்தினாலும் பலன் கிடைக்காது. இரும்புசத்து உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும். சரியான தூக்கம், சரிவிகித உணவு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக, தலை முடி உதிர்கிறதே என்று கவலை படவே கூடாது. ஏனென்றால், மன அழுத்தத்தினால் தான் முடி அதிகமாக உதிர்கிறது என்பது உண்மை. கூந்தல் வளர்ச்சிக்கு சில ஜூஸ் வகைகளை பார்க்கலாம்.

கருவேப்பிலை ஜூஸ்:

கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, நான்கு துண்டு தேங்காய், வாசனைக்காக ஒரு ஏலக்காய், சுவைக்கு தேவையான அளவு நாட்டு சர்க்கரை அல்லது பணங்கற்கண்டு. மிக்சியில் கருவேப்பிலை, தேங்காய் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் சுவைக்கேற்ப நாட்டு சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து குடித்தால் மிக சுவையாக இருக்கும். முடி நன்றாக வளர்வதுடன் முகமும் அழகு பெரும்.

முருங்கை இலை ஜூஸ்:

ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கொழுந்தாக இருந்தால் கசக்காது. மிக்சியில் முருங்கை இலை, ஒரு டீ ஸ்பூன் சீரகம் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து குடித்தால் ஒரு வாரத்தில் முடி உதிர்வு முழுமையாக நின்று கருமையாக வளரும். முருங்கை கீரையில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. பால், பேரிச்சை பழத்தை விட அதிகமாக கால்சியம் உள்ளது. உடல் எடையும் வேகமாக குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here