தமிழக காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மீண்டும் ஒப்பந்தம் – விவசாயிகள் அதிர்ச்சி!!

0

தமிழகத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜூ.சி. நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதையும் மீறி சில நிறுவனங்கள் ஒப்பந்தமிட்டுள்ளன.

ஹைட்ரோ கார்பன்:

ஹைட்ரோ கார்பன் என்பது பூமிக்கு அடியில் ஆக்சிஜன் உதவியோடு கார்பன் எனப்படும் கரியும், ஹைட்ரஜனும் இணைந்த வேதிபொருள். ஆக்சிஜன் சேரும்போது ஏராளமாக சக்தியுடன் எரியும் எரிபொருள் தான் ஹைட்ரோகார்பன். இந்த வாயுவினால் இயந்திரங்கள், மோட்டார்கள், மின் நிலையங்களை இயக்க முடியும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இவை பூமிக்கடியில் ஆங்காங்கே காணப்படுகிறது. இவற்றை, எடுத்தால் எரிபொருளுக்கு இறக்குமதியை மட்டும் நம்ப வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது. பெட்ரோலியம், நிலக்கரி, பாறை எரிவாயு என்ற வேறு பெயர்களும் உள்ளன. பூமிக்கடியில் இருந்து இவற்றை எடுப்பதற்கு அதிக செலவு ஆகும் என்று குறிப்பிடப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாடு முழுவதிலும் ஹைட்ரோ கார்பனை எடுக்க ஓ.ஏ.எஸ்.பி எனப்படும் திறந்தவெளி அனுமதி என்ற நடைமுறை 2015-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தபட்டது. கடும் எதிர்ப்பு இருக்கும் சூழலிலும் ஓ.ஏ.எஸ்.பி-ன் ஐந்தாவது சுற்றுச்சூழல் ஏலம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்க்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். அப்போது தமிழகத்தின் காவேரியில் அமைந்துள்ள நிலப்பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்துடன் 7 ஒப்பந்தகளும், ஆயில் இந்தியா லிமிட் நிறுவனத்துடன் 4 ஒப்பந்தகளும் போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here