ஹோட்டல் ஸ்டைலில் சைவ குருமா.., இட்லி, தோசைக்கு இப்படி செஞ்சு சாப்பிடுங்க.., சுவை அள்ளும்!!

0
ஹோட்டல் ஸ்டைலில் சைவ குருமா.., இட்லி, தோசைக்கு இப்படி செஞ்சு சாப்பிடுங்க.., சுவை அள்ளும்!!
ஹோட்டல் ஸ்டைலில் சைவ குருமா.., இட்லி, தோசைக்கு இப்படி செஞ்சு சாப்பிடுங்க.., சுவை அள்ளும்!!

பொதுவாக இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சட்னி சாம்பார் தான் வைத்திருபோம். ஆனால் ஹோட்டல் ஸ்டைல் சைவ குருமா ரெசிபியை செய்து சமைத்து பாருங்க சுவை தாறுமாறா இருக்கும். மேலும் தக்காளி போடாமல் செய்யும் இந்த ரெசிபியை சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தேவையான பொருட்கள் ;

  • பச்சை மிளகாய் – 2
  • வெள்ளை பூண்டு – 8
  • இஞ்சி – 2 சிறிய துண்டு
  • முந்திரிப் பருப்பு – 8
  • தேங்காய் – 1 கப்
  • சோம்பு – 1 டீஸ்பூன்
  • கசகசா – 1 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 1
  • பட்டை கிராம்பு ஏலக்காய் – சிறிதளவு
  • எண்ணெய் – 5 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • மசால் தூள் – 2

செய்முறை விளக்கம்;

குருமா ரெசிபி தயாரிப்பதற்கு ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்துக் கொள்ளவும். பிறகு அதில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் வெள்ளை பூண்டு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, தேங்காய், சோம்பு, கசகசா சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இதை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு விழுது பட அரைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது குக்கரை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை கிராம்பு ஏலக்காய் ஒரு அண்ணாச்சி பூ சேர்த்து வதக்கவும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ் உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

இயக்குனராக களமிறங்கும் விஜய்யின் மகன்., இத எதிர்பாக்கலையே பா.., வெளியான முக்கிய தகவல்!!!

அதன் பிறகு அதில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் மசாலா தூள், தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை ஊற்றி குக்கரை மூடி போட்டு மூடிக்கொள்ளவும். இப்பொழுது நமக்கு ஹோட்டல் ஸ்டைல் சைவ குருமா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here