நான் 40 கல்யாணம் வரைக்கும் கூட பண்ணிப்பேன், அது என் உரிமை – நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த வனிதா!!

0
vanitha
vanitha

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் வனிதா. தற்போது அவரின் 4 வது திருமணம் பற்றிய சர்ச்சை எழுந்து வரும் நிலையில் தற்போது அவர் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வனிதா

சர்ச்சைகள் ராணியாக கருதப்படும் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் புகழ் பெற்றதே இவரின் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையால் தான். தனது அப்பா என்று கூட பார்க்காமல் மீடியா முன்பு குடும்பத்தையே தவறாக பேசி இருந்தார். தனது மகன் ஸ்ரீஹரிக்காக பல போராட்டங்களிலும் ஈடுபட்டார்.

கடைசி வரை தன் மகன் தன்னுடன் வரமாட்டானா?? என்று ஏங்கி வருகிறார். இந்நிலையில் தான் பிக் பாஸ் வாய்ப்பு அவரை வேற லெவெலுக்கு கொண்டு சென்றது. அதனை விட வீட்டை விட்டு வெளியேறிய பின்பு செய்த அட்டகாசங்கள் இணையத்தையே கலக்கியது. எந்த சோசியல் மீடியாவை திறந்தாலும் அது வனிதா பற்றிய செய்திகளே இருந்தது.

பீட்டர் பால் திருமணம் தான் மேலும் பல சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அவரையும் விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்த படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியானது. அதுவும் திருமண புகைப்படங்கள் என்பதால் தான் அந்த அளவிற்கு வைரலானது.

இதனை அனைவரும் 4வது திருமணம் என்று கேலி செய்ய ஆரம்பித்தனர். இதற்கு வழக்கம் போல வனிதா தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.  அதாவது ஒரு ஆண் எத்தனை திருமணம் செய்தாலும் அதனை பற்றி யாரும் பெரிதாக பேசுவது கிடையாது. அதுவே ஒரு பெண் செய்தால் பெரிய குற்றம். நான் 4 இல்லை 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என் தனிப்பட்ட விருப்பம் என்று கூறியுள்ளார். மேலும் இதனால் தான் பல தற்கொலைகளும் சமூகத்தில் நிலவுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here