யூ ஸ்டோல் மை ஹார்ட்… பிங்க் கலர் டாப்பில் பேரழகியாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!!

0

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பிங்க் கலர் டாப் மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து கொண்டு செம அழகாக போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களின் அழகால் எங்களின் இதயத்தை திருடிவிட்டிங்க என்பது போன்ற கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட  என்ற நடன நிகழ்ச்சி மூலம் திரை முன் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு அவர் நீ தானா அவன், அவர்களும் இவர்களும் போன்ற படங்கள் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். இவர் திரைக்கு வந்த புதிதில் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. அதன் பிறகு அட்டகத்தி படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் துணை நடிகையாக நடித்து புகழ் பெற்றார்.

அதனை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், ஆறாது சினம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு சினிமா துறையில் நல்ல இடத்தை பெற்று தந்தது. மேலும் காக்கா முட்டை படத்தில் அவரின் எதார்த்த நடிப்பு அவரின் புகழை பட்டி தொட்டி எங்கும் பரப்பியது. அதன் பிறகு பல படங்களில் தன்னுடைய முத்திரையைப் பதித்தார்.

இதையடுத்து அவரின் அடுத்த படமான உண்மை சம்பவத்தை தழுவிய ‘திட்டம் இரண்டு பிளான் பி’ என்ற படம் கூடிய விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பிங்க் கலர் டாப் உடன் மயங்கி விழவைக்கும் பேரழகில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் அழகை வர்ணிக்க வார்த்தைகள் தேடி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here