‘விஜய் பண்ண ஒரே தப்பு உன்கூட நடிச்சது தான்’ – வனிதாவை கழுவி ஊற்றும் தளபதி ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். பல பிரச்சனைகளுக்கு பிறகு தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் விஜய் உடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

வனிதா விஜயக்குமார்

நடிகர் விஜய் குமாரின் மகளாகிய வனிதா விஜயக்குமார் குடும்பத்தை விட்டு பிரிந்து தான் உள்ளார். அவரது கல்யாணத்தில் ஏற்பட்ட பிரச்சனை தற்போது வரை நீண்டுகொண்டு தான் உள்ளது. பிரபல துணை நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து அடுத்த சில வருடங்களில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகும் அவருடன் விவாகரத்து செய்துகொண்டது தான் பெரிய சர்ச்சையே ஏற்பட்டது. விஜயகுமார் குடும்பம் மொத்தமும் வனிதாவை ஒதுக்கியது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா தனது 2 பெண் பிள்ளைகளுடன் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.  இவருக்கு ஸ்ரீ ஹரி என்ற மகனும் உள்ளார். அவரை தன்னுடன் வைத்திருக்க போராடிய வனிதா பல வழக்குகளை சந்தித்தார். தனி ஆளாக போராடினார் வனிதா.

அதன் பிறகே அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டிலும் இவரது வாயால் தான் கெட்டு போனார். யாரையும் பேசவும் விடாமல், இவரே அதிகாரம் செய்துகொண்டு திரிந்தார். இவருக்கு வத்திக்குச்சி என்றும் ரசிகர்கள் பெயர் வைத்தனர். வீட்டை விட்டு வெளியேறிய வனிதாவுக்கு பிக் பாஸ் மற்றொரு வாய்ப்பும் வழங்கியது.

காதலருடன் டேட்டிங் சென்ற பிரியா பவானி சங்கர் – வைரலாகும் புகைப்படம்!!

அதன் பிறகு குக் வித் கோமாளி, யூடுப் சேனல் என பிசியாக ஓடிக்கொண்டிருந்த வனிதாவின் வாழ்வில் பீட்டர் பால் உள்ளே வர அதுவும் சர்ச்சையாகி பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் வெளியே வந்த வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார், விஜய் உடன் அவர் எடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலரும் வனிதாவை கண்டபடி கலாய்த்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here