காதலருடன் டேட்டிங் சென்ற பிரியா பவானி சங்கர் – வைரலாகும் புகைப்படம்!!

0

நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலருடன் டேட்டிங் சென்றுள்ளார். அவரது காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

நடிகை பிரியா பவானி சங்கர்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் ‘மேயாத மான்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து தனது நடிப்பால் உயர்ந்த வந்த இவர் தமிழ் திரையுலகில் முக்கிய கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’ உள்ளிட்ட சில படங்கள் மக்களின் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஷிவானி வீட்டு விசேஷத்தில் ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இவர் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ படம் தற்போது திரைக்கு வர உள்ளது. இது தவிர ‘பொம்மை’, ‘இந்தியன் 2’, ‘குருதி ஆட்டம்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சமீபத்தில் பிரியா பவானி சங்கர் தனது காதலர் ராஜ்வேலுடன் 10வது ஆண்டு காதலை கொண்டாடினார். தற்போது தனது காதலருடன் சேர்ந்து டேட்டிங் சென்றுள்ள பிரியா பவானி சங்கர் உற்சாகமாக புகைப்படங்களை எடுத்துள்ளார். அவரது காதலருடன் பிரியா பவானி சங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here