கொடைக்கானலில் விளையும் கருப்பு நிற கேரட் – விவசாயி புதிய சாதனை!!

0

கொடைக்கானலில் கருப்பு நிற கேரட்டுகளை விவசாயி ஒருவர் விளைவித்து சாதனை படைத்துள்ளார். இந்த கருப்பு நிற கேரட்டில் அதிக நார்ச்சத்துக்களுடன் மற்ற பிற சத்துக்களும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருப்பு நிற கேரட்

பொதுவாக கேரட் ஆரஞ்சு நிறத்தில் தான் விளையும். கருப்பு நிறத்தில் உள்ள கேரட் ஒன்றை கொடைக்கானல் பகுதியில் விழையவைத்துள்ளார் விவசாயி ஒருவர். கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியைச் சேர்ந்த ஆசீர் என்ற விவசாயி, அந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ஆன்லைன் மூலம் கருப்பு நிறத்தில் விளையக்கூடிய கேரட்டின் விதைகளை வாங்கி தனக்கு உள்ள 5 சென்ட் நிலத்தில் பயிரிட்டுள்ளார். வழக்கத்தைப்போல 90 நாட்கள் பயிரிடலில் இந்த கருப்பு நிற கேரட் வளர்ந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சீன பூர்வீகத்தைக் கொண்ட இந்த கருப்பு நிற கேரட் இனிப்பு கலந்த காரம் சுவையில் இருக்கும். இந்த கருப்பு கேரட்டில், குறைந்த கலோரிகளுடன், அதிக நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. கருப்பு நிற கேரட்டில், அந்தோசியானின் என்ற நிறமி அதிகமாக இருப்பதால் இந்த கேரட்டுகள் கருப்பு நிறத்தில் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் வேகமாக நடைபெறும் மற்றும் வாயுத்தொல்லை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற நவோமி ஒசாகா!!

கருப்பு நிற கேரட் நமது உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். மேலும் காய்ச்சலை உண்டாக்ககூடிய பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டது. கேரட்டில் வைட்டமின் சி இருப்பதனால் வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்யும். புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடக்கூடியது. மேலும் பார்வைத்திறனை அதிகரிக்கக்கூடிய வல்லமை கொண்டது இந்தக்கருப்பு கேரட். அதே சமயம் இந்த கருப்பு கேரட்டை அதிகமாக உண்டால், ரத்த அழுத்தம் மற்றும் தோல்நோய் அலர்ஜி வருவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here