#TNvsPUN விஜய் ஹசாரே ட்ராபி – தமிழ்நாடு அணி அசத்தல் வெற்றி!!

0

இன்று விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதினர். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழ்நாடு அணி தனது அசத்தலான வெற்றியை பதிவு செய்து அசத்தினர்.

தமிழ்நாடு vs பஞ்சாப்:

தற்போது இந்தியாவில் உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே ட்ராபி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய போட்டியில் தமிழ்நாடு அணி மற்றும் பஞ்சாப் அணி பலப்பரீட்சை நடத்தினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி தரப்பில் சிம்ரன் சிங்க் 71, குர்கீரத் சிங்க் 139 மற்றும் சான்வீர் சிங்க் 58 ரன்களை குவித்தனர். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 288 ரன்களை குவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஷிவானி வீட்டு விசேஷத்தில் ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்!!

இந்த இலக்கை துரத்திய தமிழ்நாடு அணி இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. தமிழ்நாடு அணியின் ஜெகதீசன் மற்றும் பாபா அபராஜித் பிரமிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முடிவில் ஜெகதீசன் 101, பாபா அபராஜித் 88 மற்றும் ஷாருக் கான் 55 ரன்களை குவிக்க தமிழ்நாடு அணி 49 ஓவர் முடிவில் 289 ரன்களை குவித்து தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இதனை தெடர்ந்து தமிழ்நாடு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி அசத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here