ஷிவானி வீட்டு விசேஷத்தில் ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படம்!!

0

பிக்பாஸ் ஷிவானியின் வீட்டில் நடைபெற்ற விசேஷத்தில் அவரது நண்பர்களான பிக்பாஸ் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் ஷிவானி

தற்போது நடந்து முடிந்துள்ள பிக்பாஸ் சீசன் 4ன் நட்சத்திர போட்டியாளர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் ஷிவானி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடித்த முதல் தொடரிலேயே இவருக்கு கிடைத்த ரசிகர்கள் ஏராளம். தொடர்ந்து ‘பகல் நிலவு’ தொடர் முடிந்த பின்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘இரட்டை ரோஜா’ என்ற தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து வந்தார் ஷிவானி. இந்த தொடரின் ஒளிபரப்பின் போதே இவருக்கு பிக்பாஸ் சீசன் 4ல் கலந்தது கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட ஷிவானி ஆரம்பத்தில் மிகவும் அமைதியாக இருந்து வந்தார். இவர் மீது அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்திருந்த ரசிகர்களுக்கு, இவரது சில செயல்கள் எரிச்சல் மூட்டியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானியின் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து ஒரு காட்டு காட்டிவிட்டு சென்றார். அதன்  பின்பு அவரது விளையாட்டு வேகமாகியது.

விஜய் ஹசாரே தொடர் – இஷான் கிஷன் புதிய சாதனை!!

இருந்தாலும் பிக்பாஸ் இறுதி சுற்றின் போது கடைசி வாரத்தில் இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் சீசன் முடிந்ததும் விஜய் டிவி நடத்திய ‘பிக்பாஸ் கொண்டாட்டம்’ நிகழ்ச்சியில் ஆக்டிவாக கலந்து கொண்டார் ஷிவானி. தொடர்ந்து ‘ஸ்டார்ட் மியூசிக்’ என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் ஷிவானியின் செல்ல நாய்க்குட்டியின் முதல் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட எண்ணிய ஷிவானி தனது பிக்பாஸ் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துள்ளார். இந்த பிறந்தநாள் விழாவில் சம்யுக்தா, ஆஜீத், பாலா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here