நைஜீரிய வடிவேலுக்கு இன்று பிறந்தநாள் – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0

நைஜீரிய வடிவேலு என்று அழைக்கப்படுபவர் தான் ஒசிதா இஹேமேவு. இவரை வைத்து மீம் கிரியேட்டர்கள் பல மீம்ஸ்களை தயாரித்து ஷேர் செய்து வருவார்கள். தற்போது இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நைஜீரியா வடிவேலு:

தமிழ் திரையுலகில் வடிவேலு இல்லை என்றால் மக்களுக்கு பொழுதுபோக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் முந்தைய காலத்தில் கவுண்டமணி மற்றும் செந்திலின் கூட்டணி காமெடி காட்சிகள் அனைத்து தரப்பினரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. மேலும் அதற்கு பின்னர் தனிமனிதனாக தனது உடல் அசைவுனாலும் தனது நகைச்சுவையான செயல்களாலும் மக்களை கவர்ந்தவர் தான் வடிவேலு. இவர் இல்லாமல் தற்போதைய காலத்தில் மீம்ஸ் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரை போல் தான் நைஜீரிய நாட்டில் உள்ள ஒசிதா இஹேமேவு. இவரை சிலர் நைஜீரிய வடிவேலு என்று தான் கூறி வருவார்கள். இவர் 100கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். மேலும் பல படங்களையும் இவர் இயக்கியுள்ளார். இவர் தனது 24வது வயதில் வாழ்நாள் சாதனையாளர் பரிசை பெற்றார். அந்த அளவிற்கு இவர் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற நவோமி ஒசாகா!!

மேலும் இவர் நடித்து வெளிவந்த ஆகி நா உக்வா என்னும் திரைப்படத்தில் இவரது காட்சிகள் தற்போது மீம் டெம்ப்ளட்டாக இருந்து வருகிறது. வடிவேலுவை போல் இவரும் மீம்ஸ்களில் முக்கியமா இடத்தில் வகித்து வருகிறார். மேலும் இவரை ரசிகர்கள் நைஜீரிய வடிவேலு என்றும் கூறிவருகிறார். தற்போது இவர் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here