விஜய் ஹசாரே தொடர் – இஷான் கிஷன் புதிய சாதனை!!

0

இன்று இந்தியாவில் விஜய் ஹசாரே தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இன்று இஷான் கிஷன் சதம் அடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தற்போது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இஷான் கிஷன்:

இந்தியாவில் வைத்து நடக்கும் உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே தொடர் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கன்ட் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜார்கன்ட் அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷன் பிரம்மிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இவர் இந்த போட்டியில் 94 பந்துகளை சந்தித்து 173 ரன்களை குவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் 11 சிக்ஸ் மற்றும் 19 பவுண்டரிகளும் அடங்கும். இவரின் இந்த அசத்தலான ஆட்டத்தால் ஜார்கன்ட் அணி 50 ஓவர் முடிவில் 422 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை படைத்தது இந்த அணி. மேலும் வரப்போகிற ஐபிஎல் போட்டியில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

ரஷ்யாவில் திரியும் பச்சை மற்றும் நீல நிற நாய்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!!

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே இவர் மொத்தம் 516 ரன்களை குவித்தார். தற்போதும் இவர் செம பார்மில் உள்ளதால் மும்பை அணி ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர். மேலும் இவரது ஆட்டத்தை ஐபிஎல்-லில் பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here