காதலில் விழுந்தாரா வாணி போஜன்??? – அவரே சொன்ன பதில்!!!

0

வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் வாணி போஜன். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், காதலில் விழுந்து உள்ளீரா என ஒருவர் கேட்க அதற்கு வாணி போஜன் ஒரு பதில் கூறுகிறார்.

தெய்வமகள் சத்யாவாக மக்களுக்கு அறிமுகமானவர் வாணி போஜன். இவர் சின்னத்திரை சீரியல்கள் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அவ்வாறு அவர் சீரியல்களில் நடித்து கொண்டிருக்கும் போதே அவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது. மேலும் இவர் சின்னத்திரையில் ஒரு நயன்தாராவாக வலம் வந்தார். வெள்ளித்திரையில் மார்க்கெட் சரிந்த பிறகு நடிகைகளின் அடுத்த கட்ட நடவடிக்கை சின்னத்திரை சீரியல்கள் தான்.

ஆனால் தற்போதோ நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அதாவது சின்னத்திரையில் நடித்து கொண்டிருக்கும் போதே அவர்களுக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கி விடுகிறது. அப்படி வாணி போஜனுக்கு கிடைத்த வாய்ப்பு தான் ஓ மை கடவுளே படம். இந்த படத்திற்கு பிறகு அவர் மலேஷியா டூ அம்னீஷியா போன்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இவர் பாயும் ஒளி நீ எனக்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்  படங்களில் நடிக்க ஆரம்பித்த உடன் இவர் கொஞ்சம் கவர்ச்சி காட்ட தொடங்கி உள்ளார். அதாவது சீரியல் மூலம் தனக்கு கிடைத்த ரசிகர்கள் கூட்டத்தை படங்கள் மூலம் அதிகரித்து கொண்டார். மேலும் தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை பெருக்க அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

அதில் ஒரு சில ஹாட் புகைப்படங்களும் இருக்கும். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஒருவர் அவரிடம் காதலில் விழுந்து உள்ளீரா? என கேட்க அதற்கு இவர் ஆமாம் என்ற படி தலை அசைக்க,அதன் பின்னர் எத்தனை முறை என கேட்கிறார். அதற்கு வாணி போஜன் சிரித்தபடி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here