பொய் சொல்லக்கூடாது என எச்சரித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்.. குழம்பிய ரசிகர்கள்!!!

0

சீரியல்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் சுஜிதா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் ரன் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியாக அறியப்படும் சுஜிதா ஒரு குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்கள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

மேலும் இவர் தற்போது விஜய் டிவியின் வெற்றி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வீட்டின் மூத்த மருமகள் தனம் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் தற்போதைய கதையில் கண்ணனின் ரகசிய திருமணத்தால் அவன் படும் கஷ்டங்களும் வேதனைகளை நினைத்து குடும்பம் படும் கவலைகள் என பல பரபரப்பான காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த சீரியலின் ஷூட்டிங் இல்லாத நேரத்தில் அவர்கள் செய்யும் லூட்டிகள் இணையத்தில் ட்ரெண்டான ஒன்று. அந்த வகையில் சுஜிதா தனது  இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் மாதவன், மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்த ரன் படத்தில் இடம் பெற்ற பொய் சொல்லக்கூடாது…என தொடங்கும் பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here