விபத்திற்கு பிறகு முதல் முறையாக மனம் திறந்த யாஷிகா ஆனந்த் – அவரே வெளியிட்ட பதிவு!!

0

தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்து விட்டு வாய்ப்புக்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தவர் யாஷிகா. அந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்க்கு கிடைத்த பட வாய்ப்பால் சினிமாவில் ஜாம்பி, நோட்டா, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்தார்.

இதனோடு இவரின் கவர்ச்சியும் இவருக்கு பலமாக கைகொடுக்க சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். ஆனால் கடந்த மாதம் இவருக்கு மிக மோசமான கார் விபத்து ஒன்று ஏற்பட்டது. அதில் அவர் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிர் உயிழந்தார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா குணமாக 6 மாத காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

அதன் பின்னர் தன் இன்ஸ்டா பக்கத்தில் தன் தோழி இறந்ததை நினைத்து மிக உருக்கமாக பதிவிட்டு இருந்தார். தற்போது இவரின் கடமையை செய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தி அன்று அதாவது செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. எனவே அதை தன் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அவருடைய பதிவில் இந்த இடத்திற்கு வர நான் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். அதனோடு எனக்கு உறுதுணையாக இருந்ததற்காக கடமையை செய் படத்தின் நாயகன் எஸ். ஜெ. சூர்யா அவர்களுக்கு நன்றி என்றும் யாஷிகா கூறியுள்ளார். ரசிகர்கள் இவருக்கு அறிவுரையையும், ஆறுதலையும் கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here