வெறித்தனமாக வெளியான வலிமை பட அப்டேட் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

0

தல ரசிகர்கள் தவமிருந்து காத்துக்கொண்டிருந்த வலிமை படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் ஆரவாரத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

வலிமை:

சுமார் ஒரு வருட காலத்திற்கும் மேலாக அரசு, விளையாட்டு, பொது துறை என அனைத்து இடங்களிலும் ஒளித்து கொண்டிருப்பது தான் ‘வலிமை’ அப்டேட். இதனை ரசிகர்கள் பாரபட்சமின்றி அனைத்து தரப்பினைடமும் கேட்டு வருகின்றனர். மேலும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து ஒரு நேரத்தில் ரசிகர்கள் எல்லையை மீறி சென்றனர். இதனால் கடுப்பான தல அஜித், உரிய நேரத்தில் வலிமை அப்டேட் வெளியாகும் என்று கூறி ரசிகர்களை ஆஃப் செய்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருந்தும் இதனை கேட்காத சில ரசிகர்கள் முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என அரசியல் நிகழ்ச்சிகளிலும் வலிமை படத்தின் அப்டேடை கேட்டு வந்தனர். ஆனாலும் தொடர்ந்து வலிமை படத்தின் தயாரிப்பாளர் ரசிகர்களை கூல் செய்து வந்தார். தற்போது சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக தல ரசிகர்கள் இருந்த தவத்திற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. மே 1 என்றாலே அனைவரின் ஞயாபகத்திற்கு வருவது தல பிறந்தநாள் தான். ஆனால் இந்த வருடம் அது கொஞ்சம் ஸ்பெஷல்.

‘சினிமாவுக்கு வராததுக்கு காரணமே அவதான்’ – நடிகை கவுதமி ஓபன் டாக்!!

ஏனெனில் இது தல அஜித்தின் 50வது பிறந்தநாள். எனவே இதனை தல ரசிகர்கள் கொண்டாடுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்து வருகின்றனர். மேலும் இதனை இன்னும் ஸ்பெசலாக்கும் வகையில் ஓர் அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அது வேற ஒன்றும் இல்லை வலிமை படத்தின் அப்டேட் தான். வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற ‘தல’யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு வெளிவரும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் தற்போது குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here