காப்பி கன்டன்ட்னாலும் ஒரு நியாயம் வேணாமா?? விஜய் டிவியுடன் போட்டி போடும் சன் டிவி!!

0

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியை போல் சன் டிவியும் ஓர் நிகழ்ச்சியை துவங்கவுள்ளது. இதில் மாஸ்டர் பட பிரபலம் தொகுத்து வழங்க உள்ளார்.

சன் டிவி:

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை தற்போது ராக்கெட் வேகத்தில் உயர்த்தி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் சமையலை விட கோமாளிகள் அடிக்கும் லூட்டி தான் அதிக அளவில் பேசப்படுகிறது. அதிலும் குறிப்பாக புகழ்-ஷிவாங்கி நடத்தும் பாச போராட்டங்கள் மற்றும் ஷிவாங்கி-அஸ்வின் அடிக்கும் லூட்டி தான் தற்போது ட்ரெண்ட் ஆக உள்ளது. இவர்களை காண்பதற்காக இந்த நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் பார்த்து வருகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வாரம் வாரம் மக்களை தவறாமல் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் சிறந்து விளங்குகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் சோக வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் தற்போது சன் டிவி தனது டிஆர்பியை உயர்த்துவதற்கு திட்டம் தீட்டி உள்ளது. ஆனால் அதற்கு விஜய் டிவியை காப்பியடிக்கிறது சன் டிவி. ஆம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போல் சன் டிவியும் தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றை துவக்க உள்ளது.

‘சினிமாவுக்கு வராததுக்கு காரணமே அவதான்’ – நடிகை கவுதமி ஓபன் டாக்!!

சன் டிவி ஆரம்ப காலத்தில் இருந்தே விஜய் டிவியை காப்பியடித்து வருகிறது என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக அப்போது விஜய் டிவியில்-சூப்பர் சிங்கர், சன் டிவியில்-சன் சிங்கர் இப்பொது சமையல் நிகழ்ச்சி. என்னதான் சன் டிவி விஜய் டிவியை காப்பி அடித்தாலும் சன் டிவியால் டிஆர்பி ரேட்டிங் ஸ்டாராக முடியவில்லை. தற்போது விஜய் டிவி பாணியில் துவங்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் யார் என்று தெரிந்தால் அனைவரும் அதிர்ந்து போய் விடுவீர்கள். மாஸ்டர் திரைப்படத்தில் பவானியாக வந்து அனைவரையும் மிரளவைத்த விஜய் சேதுபதி தான் இந்த நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக வலம் வரவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here