விரைவில் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் – போனிகபூர் அறிவுப்பு!!

0

தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் கதறி வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றிய தகவல் ஒன்றை தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.

வலிமை:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் தல அஜித். இவர் ஆண்டுக்கு ஒரு படத்தை நடித்து வெளியிட்டு வந்தாலும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள். நேர்கொண்ட பார்வையின் வெற்றிக்கு பின்னர் தல அஜித் மற்றும் வினோத் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் ஜோடியில் வலிமை என்னும் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஜி ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரிக்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு அஜித்தின் ரசிகர்கள் தினமும் கேட்டு வருகிறார்கள். அப்டேட் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்தனர். மேலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியிலும் கூட இங்கிலாந்து வீரர் மொயின் அலியிடம் கூட தல ரசிகர்கள் அப்டேட்டை கேட்டுள்ளனர். அந்த செய்தி மிக வைரலானது. சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசையமைப்பாளர் யுவன் தனது வலைதள பக்கத்தில் இந்த படத்தை பற்றிய தகவல் ஒன்றை வெளியிட்டார்.

குக் வித் கோமாளி சிவாங்கி வெளியிட்ட பதிவால் சர்ச்சை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

அதன்படி இந்த படத்தின் முதல் பாடல் முடிந்து விட்டதாகவும், அந்த பாடலுக்காக ஒடிசாவில் இருந்து டிரம்ஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டதாகவும், இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றி தயாரிப்பாளர் போனிகபூர் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும். அதுவரை ரசிகர்கள் கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள். நீங்கள் காட்டும் ஆர்வத்தை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here