குக் வித் கோமாளி சிவாங்கி வெளியிட்ட பதிவால் சர்ச்சை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. சுட்டி பெண்ணாக அனைவரையும் கவர்ந்து வரும் இவர் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

சிவாங்கி:

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் சிவாங்கி கிருஷ்ணகுமார். இசை பின்னணியை கொண்ட குடும்பத்திலிருந்து வந்த அவர் முதலில் கலந்து கொண்டது சூப்பர் ஹிட் ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தான். அதில் போட்டியாளராக அறிமுகமாகி தனது பாடும் திறமையின் மூலமும், வெகுளித்தனமான குணத்தின் மூலமும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு அவர் பங்கேற்ற நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இதில் கோமாளியாக கலந்து கொண்ட அவர் அடித்த லூட்டிகளுக்கு ஏராளமானோர் ரசிகர்களானார்கள். தற்போது ஒளிபரப்பாகி வரும் அந்த நிகழ்ச்சியின் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.

அஷ்வினுக்கு நடராஜன் வைத்த பெயர் – ட்ரெண்ட் ஆக்கும் ரசிகர்கள்!!

இப்படி அனைவராலும் சுட்டிப்பெண் என்று கொண்டாடப்படும் சிவாங்கி தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது என்னவென்றால், நேற்றய தினம் சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராக #gobackModi எனும் ஹேஷ்டாக்கை இணையத்தில் வைரலாக்கினர் நெட்டிசன்கள். மோடியின் ஆதரவாளர்கள் #tnWelcomesModi என்ற ஹேஷ்டாக்கை வெளியிட்டு அவரை வரவேற்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் சிவாங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் #gobackModi என்று ஹேஷ்டேக்கை பதிவிட்டு மோடியின் வருகைக்கு எதிரான தனது எதிர்ப்பினை காட்டியுள்ளார். அவரது இந்த பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் யாரோ ஒருவர் சிவாங்கி பெயரில் உருவாக்கப்பட்ட போலி ஐடியிலிருந்து வெளியிட்ட பதிவுதான் அது என்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here