பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி!!

0

சின்னத்திரையில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் வடிவேல் பாலாஜி இன்று உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானார். இவரது மறைவு திரையுலக நட்சத்திரங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

வடிவேல் பாலாஜி:

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வடிவேல் பாலாஜி. மதுரையைச் சேர்ந்த இவர் கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 42 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்!!

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி காலமானார். நடிகர் வடிவேலு போன்று நடித்து மக்களை சிரிக்க வைத்த கலைஞன் மறைவு திரை உலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here