நீங்க இந்த கிழமையில் பிறந்தவரா? அப்போ நீங்க இப்படி தான் இருப்பிங்க!!

0
numerological
numerological

ஒருவரின் ஜாதக அமைப்பின் ராசி மற்றும் லக்கினம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு எண் கணிதமும் முக்கிய பங்கு வகிக்கிறது. எண் கணிதத்தில் ஒருவரின் பிறந்த தேதி மற்றும் கிழமைகள் மிக முக்கியமாகும். அதன் அடிப்படையில் பிறந்த கிழமைகளை வைத்து அவரின் குண நலன்களை கணிக்கலாம்.

எண் கணிதம்

ஜோதிடம் என்பது 12 கட்டங்களும் அதில் அமர்ந்திருக்கும் 9 கிரகங்களின் நிலையே ஆகும். ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளன. மேலும் ராசி நாதர்கள் அமர்ந்திருக்கும் இடத்தை பொறுத்தே அதன் பலன்கள் நமக்கு கிடைக்கின்றன. ஆனால் ஜோதிடம் அதை மட்டுமே குறிப்பிடுவது அல்ல.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

horoscope
horoscope

அதாவது ஜோதிடத்தில் பிரசன்ன ஜோதிடம், திருக்கணிதம், பஞ்சாங்கம், நாடி ஜோதிடம், எண் கணிதம் போன்றவை அடங்கும். இவைகள் அனைத்தும் எதிர்காலத்தை கணிப்பதற்காகவும், பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து அதற்கு தீர்வு காணவும் பார்க்கப்படுவது. அந்த வகையில் எண் கணிதமும் முக்கியமான ஒன்றாகும். மேலும் ஒருவர் பிறந்த கிழமையின் அடிப்படையில் அவர்களின் குணத்தை கணிக்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை

Sunday-
Sunday-

ஞாயிற்றுக் கிழமை சூரிய பகவானை குறிப்பிடுவது. இந்த கிழமையில் பிறந்தவர்கள் ஆற்றல் மிக்கவராகவும், அதே சமயம் படிப்பில் சிறந்தவராகவும் இருப்பர். எந்த கடின வேலைகளையும் செய்து முடிக்கும் திறன் படைத்தவர்கள்

திங்கள் கிழமை

Monday
Monday

திங்கள் என்பது சந்திரனை குறிப்பிடுவது. இந்த நாளில் பிறந்தவர்கள் சாந்தமான குணத்தை பெற்றிருப்பார். எதையும் சுலபமாக நம்பி விடுவர். மேலும் இவர்கள் அதிகமாக காதல் வயப்படுவர். இவர்களுக்கு எப்பொழுதும் அவரின் குணத்தை போலவே நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அமைவார்கள்.

செவ்வாய் கிழமை

tuesday
tuesday

செவ்வாய் பகவானை குறிப்பிடும் கிழமையாகும். செவ்வாய் கிழமையில் பிறந்தவர்களுக்கு ஆதிக்க குணங்கள் அதிகம் இருக்கும். எதையும் செய்து முடிக்கும் திறமை இவர்களிடம் இருக்கும். மேலும் நியாய தர்மத்திற்கு பெயர் போனவர்கள்.

புதன் கிழமை

wednesday
wednesday

புதனை படிப்புக்காரகன் என்று அழைப்பதுண்டு. எனவே புதன் கிழமையில் பிறந்தவர்கள் படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார். மேலும் எதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும். காதலில் சுலபமாக விழக்கூடியவர்களும் கூட.

வியாழக்கிழமை

thursday
thursday

வியாழன் குரு பகவானை குறிப்பிடுவதாகும். குரு பகவான் என்றாலே நீதி, நேர்மை என்று தான் பொருள். அதற்கு ஏற்றார் போல வியாழக்கிழமை பிறந்தவர்கள் இருப்பார்கள். மற்றவர்களுக்கு அதிகமாக புத்திமதி சொல்பவராகவும் இருப்பார்கள்.

வெள்ளிக்கிழமை

friday
friday

வெள்ளிக்கிழமை சுக்ரனை குறிப்பிடுவது. சுக்ரன் என்றாலே அழகு, ஆடம்பரம். வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் நல்ல உடல்வாகும், அழகும் பெற்றிருப்பர். மேலும் இவர்கள் கலைத்துறையில் நல்ல ஆர்வம் பெற்றவர்களாக இருப்பர். பேச்சால் அனைவரையும் கவர்ந்திலுக்கும் சக்தி இவர்களுக்கு இருக்கும்.

சனிக்கிழமை

saturday
saturday

சனி பகவானை குறிப்பிடுவது. நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். சனிக்கிழமையில் பிறந்தவர்கள் புத்திசாலியாகவும், ஒரு வேலையை கண்ணும் கருத்துமாக செய்து முடிப்பதில் வல்லவராகவும் இருப்பர். அதிகாரப் பண்பு இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here