சாலையில் கிடந்த 500, 100 ரூபாய் நோட்டுகள், கண்டுக்காத மக்கள்..! கொரோனா பயமா..?

0

த்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தின் சகேத் நகரில் உள்ள கான்பூர் இணைப்பு சாலையில் ஏராளமான ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள் வீசப்பட்டு இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச சாலையில் ரூ.500,100 நோட்டுக்கள்:

 உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தின் சகேத் நகரில் உள்ள கான்பூர்இணைப்பு சாலையில் நேற்று காலை ஏராளமான ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள் வீசப்பட்டு இருந்தன. அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு மாநில தலைநகர் லக்னோவில் உள்ள பேப்பர் காலனி பகுதியில் இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் வீசப்பட்டு இருந்தன. இது பற்றியும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு கிடைத்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய போலீசார், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் அவற்றின் நம்பகத்தன்மையை சோதித்து வருகின்றனர்.

இந்தியாவில் 90 மருத்துவ பணியாளர்களை தாக்கிய கொரோனா – அதிர்ச்சியளிக்கும் தகவல்..!

ரூபாய் நோட்டுகள் கீழே கிடந்தால் உடனே எடுத்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட சில மக்கள்கூட போலீசாருக்கு தகவல் கொடுக்க காரணம், அங்கு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு வீடியோதான். அந்த வீடியோ காட்சியில் ரூபாய் நோட்டுகள் மூலம் சிலர் கொரோனா வைரஸை பரப்ப சதி திட்டம் தீட்டி, சாலைகளில் வீசுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால்தான் மக்கள் ஒருவித பயம் கலந்த பீதியுடன் கீழே கிடக்கும் ரூபாய் நோட்டுகள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் அதுபோல சதி திட்டம் எதுவும் நடைபெறவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here