தித்திக்கும் தமிழ்ப் புத்தாண்டு – வாழ்த்துக் கூறிய தமிழக முதல்வர் & துணை முதல்வர்..!

0

சித்திரை முதல் நாளாம் “சார்வாரி” என்ற தமிழ் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழ்நாடடின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

EPS & OPS வாழ்த்து

நாளை தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் இபிஎஸ், மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இணைந்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். சித்திரை முதல் நாளாம் ‛சார்வரி’ என்ற தமிழ் புத்தாணடு புலருகின்ற இந்த இனிய நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது உளம் கனிந்த வாழ்த்துகளை அன்போடு தெரிவித்து கொள்கிறோம் என வாழ்த்து செய்தி வெயிட்டார். எத்தனை இடர்பாடுகள் இருப்பினும் காலத்தால் அனைத்தும் மாறும் என தெரிவித்திருந்தனர். புதியன தோன்றும், மகிழ்ச்சி மலரும் என்ற புதிய நம்பிக்கைகளை புத்தாண்டு நமக்கு அளிக்கிறது என வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருந்தார். இன்று உலகை சூழ்ந்திருக்கும் இன்னல்கள் யாவும் தீர்ந்து பொய்யாகி, புதுவாழ்வு மலர புத்தாண்டில் எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என எங்களது மனமார்ந்த பிரார்த்தனையை தமிழ் மக்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம் என தெரிவித்தனர்

டிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம் – முறைகேடுகள் தடுக்கப்படுமா..?

வீட்டிலே இருக்குமாறு வேண்டுகோள்

மேலும் தமிழக மக்கள் யாரும் வெளியே செல்வதை தவித்து வீட்டிலேயே இருக்குமாறு தெரிவித்தார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா தொற்று பரவுவதை தடுப்போம் என கூறினார். மேலும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பது மட்டும் தான் நாம் செய்ய வேண்டிய ஒன்றும் எனவும், அதை பின்பற்றினாலே நாம் கொரோனா தொற்றை சுலபமாக பரவுவதை தவிர்க்கலாம் என கூறினார். மேலும் ஒருவருக்கிடையே சமூக இடைவெளி விட்டு இருப்பது மற்றும் கைகளை கழுவது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

எனவே மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே புத்தாண்டை கொண்டாடுங்கள் என கூறினார். தமிழர் தம் இல்லங்களில் நலமும் வளமும் பெருகட்டும் என்றும், தமிழினம் அனைத்திலும் வெற்றி வாகை சூடட்டும் என்றும் முதலமைச்சர் தமது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழகமும், தமிழக மக்களும் வளமான எதிர்காலத்தை பெற்று முன்னேறி செல்ல வாழ்த்துகிறேன்.  நல்லிணக்கம், சகோதர உணர்வை கடைப்பிடித்து வளர்ச்சி மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிட உறுதிகொள்வோம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார்.

கேரளாவுக்கு வாழ்த்து

கேரளாவின் புத்தாண்டு தினமான விஷூ திருநாளையொட்டி மலையாள மக்களுக்கும் தமிழக முதல்வர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், மலையாளமொழி பேசும் மக்களுக்கு அன்பு, மகிழ்ச்சி வழங்கும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும். நன்னாளில் பெரியவர்களிடம் குழந்தை, இளைஞர்கள் ஆசிப் பெற்று விஷூ கைநீட்டம் எனும் பணப்பரிசை பெற்று மகிழ்வர்” என்று தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here