மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் மூலம் கொரோனா பரவுமா..? கேள்விகளும் பதில்களும்..!

0

கொரோனா வைரஸ் தாக்கம் திடீரென்று வேகமாக பரவி பல உயிர்களைப் பறித்து வரும் இந்த வைரஸ் குறித்து பலரது மனதில் ஒருசில கேள்விகள் எழும். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம். இந்த கேள்விகளுக்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மளிகை பொருட்களில் மூலம் பரவுமா..?

மளிகைப் பொருட்களில் இருந்து வைரஸ் பரவாது. ஆனால் மளிகை கடைக்கு செல்லும் போது, அந்த கடைக்கு வைரஸ் பாதித்த நபர் வருகை தந்து, இருமல் தும்மலால் வெளிவரும் துகள்கள் கடையின் ஏதேனும் மேற்பரப்பில் இருந்து, அந்த மேற்பரப்பை நீங்கள் தொட்டுவிட்டு உங்கள் முகத்தை தொட்டால் வைரஸ் தொற்றிக் கொள்ளும். எனவே உங்கள் கைகள் மற்றும் காய்கறிகளை நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும்.

மொபைல்கள் மூலம் பரவுமா..?

உங்கள் ஸ்மார்ட்போனை பாக்கெட்டிலேயே வைத்திருந்து, வெளியே எடுக்காமல் இருந்தால், வைரஸ் எதுவும் பரவாது. ஆனால் இது ஒரு கேட்ஜெட், அதோடு முகத்தின் அருகே வைத்து பயன்படுத்தக்கூடியது. எனவே போனை கண்ட இடத்தில் வைப்பதைத் தவித்திடுங்கள். குறிப்பாக அசுத்தமான இடத்தை தொட்ட பின், போனைத் தொடும் முன் கைகளைக் கழுவுங்கள். இதனால் போன் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம்.

கொரோனா அறிகுறிகள்..!

காய்ச்சல், உடல் வலி, சோர்வு, தொண்டைப் புண் மற்றும் வறட்டு இருமல் போன்றவை COVID-19-இன் பொதுவான அறிகுறிகளாகும். சில சமயங்களில் மூக்கடைப்பு மற்றும் மூக்கு ஒழுகல் போன்றவற்றையும் சந்திக்கலாம். அதைத் தொடர்ந்து மூச்சுத் திணறல் மற்றும் நிமோனியா போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

யார் அதிகம் ஆபத்தில் உள்ளனர்..?

கொரோனா வைரஸ் வயது பாலினம் மற்றும் பின்னணி என்று எதையும் பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். ஆனால் வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளான சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களை எளிதில் தாக்குவதற்கான அபாயம் உள்ளது. இத்தகையவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எவ்வாறு பரவுகிறது..?

இது மிகவும் பயங்கரமான தொற்றுநோயை வைரஸ் ஆகும். இது பாதிக்கப்பட்ட நபரின் இருமல் அல்லது தும்மலின் போது காற்றில் வெளியாகும் நீர்த்துளிகள் வழியாக பரவுகிறது. இந்த நீர்த்துளிகள் ஏதேனும் பொருட்கள் அல்லது மேற்பரப்புகளிலும் இருக்கலாம் மற்றும் இந்த பகுதியை ஒருவர் தொட்டால், அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படலாம்.

தடுக்கும் நடவடிக்கைகள்..!

சோப்பு மற்றும் நீரால் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். அதுவும் குறைந்தது 20 நொடிகள் கைகளின் இடுக்குகளில் எல்லாம் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். கூட்டத்தைத் தவிர்க்கவும், சமூக மற்றும் உடல் ரீதியான தூரத்தைப் பராமரிக்கவும் மற்றும் ஆரோக்கியமான சுவாசத்தைக் கடைப்பிடிக்கவும்.

மாஸ்க் கட்டாயம் அணிய தேவையில்லை. நோய்வாய்ப்பட்டவர்களைப் பார்க்கச் செல்லும் போது அல்லது வைரஸ் தொற்று அபாயம் அதிகம் உள்ள வேலையில் இருப்போர் தான் கட்டாயம் அணிய வேண்டும்.வைரஸின் கேரியர் யார் என்று உங்களுக்குத் தெரியாததால், மக்களிடமிருந்து 1 மீட்டர் அல்லது 3 அடி தூரத்தை நீங்கள் பராமரிக்க வேண்டும்.

காற்றின் மூலம் பரவுமா..?

இந்த நோய் காற்று வழியாக இல்லாமல், பாதிக்கப்பட்டோரின் சுவாசத் துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. ஆனால் சில ஆய்வுகள் சுவாச நுண்ணுயிர்கள் தரையில் விழுவதற்கு முன்பு சிறிது நேரம் காற்றில் நிறுத்தி வைக்கப்படலாம் என்று கூறுகின்றன.

சிகிச்சைகள் ஏதேனும் உள்ளதா..?

இந்த நோய்க்கு இன்னும் சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை. உலகெங்கிலும் உள்ள பல இடங்களில் மருத்துவ பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் விஞ்ஞானிகள் ஏற்கனவே இருக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பார்க்கிறார்கள். ஆனால் இன்னும் எதுவும் உறுதியாகவில்லை.

COVID-19 SARS-க்கு சமமானதா..?

கொரோனா வைரஸ் COVID-19 ஐ உண்டாக்கும். SARS-ஐ உண்டாக்கக்கூடியவை அதே மரபணுக்களுடன் தொடர்புடைய வைரஸ் ஆகும். ஒரே மரபணு தொடர்பை கொண்டிருந்தாலும், இவை உண்டாக்கும் நோய்கள் முற்றிலும் வேறுபட்டவை. COVID-19-ஐ விட SARS மிகவும் கொடியது. ஆனால் இது குறைவான அளவிலேயே மக்களைத் தாக்கியது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here