டிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் IAS நியமனம் – முறைகேடுகள் தடுக்கப்படுமா..?

0

TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.இது தமிழ்நாடு அரசுக்கு கட்டுப்பட்ட ஆணையம் ஆகும்,டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையத்தின் தலைவராக அருள்மொழி ஐஏஎஸ் பதவி வகித்து வந்தார்

TNPSC தலைவர் நியமனம் :

டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையத்தின் தலைவராக அருள்மொழி ஐஏஎஸ் பதவி வகித்து வந்தார், அருள்மொழி ஐஏஎஸ் பதவிக்காலம் நிறைவு பெறுவதை ஒட்டி, டி.என்.பி.எஸ்.சி.,யி புதிய தலைவராக கடந்த 2 ஆண்டுகளாக  வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த பாலச்சந்திரனை தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது,இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர் ஆவார்

அண்மையில் நடந்த  டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், கா. பாலச்சந்திரன் வருகைக்குப் பின் அதற்கான நடவடிக்கை கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here