உ.பி மருத்துவமனை எங்களை விலங்குகளை போல் நடத்துகின்றனர் – கொரோனா நோயாளிகள் போராட்டம்..!

0

தற்போது உள்ள கொரோனா பாதிப்பில் நாடெங்கிலும் ஊரடங்கு ஊரடங்கு பிறப்பித்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் பல மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து தற்போது உ.பி மருத்துவமனையில் தங்களுக்கு உணவு தண்ணீர் எதுவும் வழங்குவதில்லை என மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உ.பி மருத்துவமனை

UP Government Asked About Steps Taken To Improve Government ...

உத்திர பிரதேச மாநிலத்தின் பிரயாகராஜ் மாவட்டத்தில் கௌதபானி என்ற இடத்தில் உள்ள முதல் நிலை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. தற்போது அங்கு உணவு மற்றும் தண்ணீர் சரியாக வழங்க படவில்லை என மக்கள் மருத்துமனையில் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தங்களை விலங்குகளை போல் நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வீடியோ கட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ

அந்த வீடியோ காட்சியில் வீடியோ எடுப்பவர் சரியான உணவு கிடைக்கிறதா என கேட்கிறார் அதற்கு அவர் ‘இல்லை’ என பதிலளித்துள்ளார். மேலும் கூட்டத்தில் உள்ள பெரியவர் ஒருவர் சரியாக சமைக்கப்படாத உணவுகளையே எங்களுக்கு வழங்குகின்றனர் என்ச கூறியுள்ளார். மேலும் எங்களை சரியாக கவனித்துக்கொள்ள பணம் பெறுகிறார்கள் என கூறியுள்ளனர்.

Coronavirus, Italy's Overwhelmed Hospitals, Israel Protests: Your ...

“நிர்வாகத்திடம் பணம் இல்லையெனில் எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். இதே நிலை நீடித்தால் நாங்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற வேண்டிய நிலை வரும்“ என இரு நோயாளிகள் குறிப்பிடுகின்றனர்.’குடிநீர் பிரச்னை இரண்டு மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது. மின்சார தடை காரணமாக நீர் வழங்கல் தாமதமாகியது. பின்னர் எலக்ட்ரீஷியனை கொண்டு பிரச்னை முழுவதும் தீர்க்கப்பட்டது. தண்ணீர் தொட்டிகளில் எப்போதும் தண்ணீர் இருந்துகொண்டு இருக்கின்றது. ஆனால், நோயாளிகள் குளிப்பதற்கு புதிய நீரை கோருகின்றனர்.” என பிரயாகராஜின் தலைமை மருத்துவ அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புகார்கள்

Kerala: Private Nurses up against Private Hospitals over minimum ...

உத்தர பிரதேசத்தில் இதுபோன்று கொரோனா தொற்று நோயாளிகளுக்கான மருத்துவமனைகள் மீது தொடர் புகார்கள் வந்திருக்கின்றன. முன்னதாக எட்டாவா மற்றும் ஆக்ரா மாவட்ட மருத்துவமனைகளிலிருந்தும் இது போன்ற பிரச்னை முன்னெழுந்தது. அதேபோல முதல் மற்றும் இரண்டாம் நிலை கொரோனா அரசு மருத்துவமனைகளில் மொபைல் போன்கள் பயன்பாட்டிற்கு மாநில மருத்துவக் கல்வித்துறை தடை விதித்திருந்தது. பரவலான எதிர்ப்பிற்கு பின்னர் இந்த தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here