வெளி மாநில தொழிலாளர்களை விமானத்தில் சொந்த ஊருக்கு அனுப்பிய விவசாயி – நெகிழ்ச்சியில் தொழிலாளர்கள்..!

0

கொரோனா பாதிப்பால் நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் வெளி மாநிலத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே டெல்லியில் தம்மிடம் வேலை பார்த்த தொழிலாளர்களை சொந்த செலவில் விமானத்தில் அவர்களின் ஊருக்கு அனுப்பு வைத்துள்ளார்.

விவசாயி

Farmers plan 2-day protest in Delhi to demand better MSP, loan ...

டில்லியை சேர்ந்த பப்பன் கெக்லாட் என்ற பண்ணை விவசாயி, காளான் விவசாயம் செய்து வந்தார். அவரது பண்ணையில், பீகாரை சேர்ந்த 10 பேர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கால் தனது சொந்த ஊருக்கு செல்ல விரும்பிய அவர்களுக்கு விமானத்தில் டிக்கெட் எடுத்து கொடுத்து அனுப்பி வைத்துள்ளார். கெக்லாட் விமான டிக்கெட்டுக்காக சுமார் 68 ஆயிரம் ரூபாய் செலவிட்டதுடன், தொழிலாளர்களின் செலவுக்காக தலா ரூ.3 ஆயிரமும் கொடுத்து அனுப்பி உள்ளார்.இந்த செயல் அனைவரும் பாராட்டும் விதமாக உள்ளது

தொழிலாளர்கள்

மேலும் இதை குறித்து அந்த தொழிலாளர்கள் கூறுகையில், “நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை. எங்கள் முதலாளி இதை செய்து கொடுத்துள்ளார். நாங்கள் நடந்தோ, சைக்கிளிலோ, பஸ்சிலோ அல்லது ரயிலிலோ செல்லவில்லை. விமானத்தில் பயணிக்கிறோம். இதை எங்களால் நம்பவே முடியவில்லை. எங்களை நாங்களே கிள்ளி பார்த்து கொண்டோம்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்திருந்தன.

latest tamil news

இது குறித்து அந்த விவசாயி கெக்லாட்டின் சகோதரர் கூறியதாவது “முதலில் ரயிலில் அனுப்ப தான் முடிவு செய்தோம். ஆனால், டிக்கெட் கிடைக்காததால், விமானத்தில் அனுப்ப முடிவு செய்தோம். இவர்கள் 20 ஆண்டுகள் எங்களுடன் பணியாற்றிவர்கள். அவர்கள் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம். அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம்: என்றார். மனித நேயம் மக்களிடம் இருந்துகொண்டுள்ளது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here