மேற்கு மண்டல பொறுப்பாளர் உதயநிதியா?? – திமுக பண்ணுவது குடும்ப அரசியல்!!!

0
மேற்கு மண்டல பொறுப்பாளர் உதயநிதியா?? - திமுக பண்ணுவது குடும்ப அரசியல்!!!
மேற்கு மண்டல பொறுப்பாளர் உதயநிதியா?? - திமுக பண்ணுவது குடும்ப அரசியல்!!!

திமுக பண்ணுவது குடும்ப அரசியல். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி செய்தது போல் இப்பொழுது மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். நடப்பது மக்கள் ஆட்சி மன்னர் ஆட்சி அல்ல நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

திமுக பண்ணுவது குடும்ப அரசியல்…

திமுக கட்சி கடந்த 10 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகனையும் திமுக கட்சியின் தற்போதைய தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதலைவராக பொறுப்பேற்றியுள்ளார். அவர் முதல்வர் பதவிக்கு வந்த உடனே நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அத்துடன் கொரோனா நோய் காலத்தில் பரவலை தடுக்க மிக சிறப்பாக பணியாற்றினார்கள். இந்நிலையில் தமிழக மேற்கு மண்டல பொறுப்பாளராக மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளாராம். உதயநிதி நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். பங்கேற்ற முதல் தேர்தலிலே வெற்றியை கண்ட இவர் எம்.எல்.ஏ.ஆக பொறுப்பேற்றார். இப்பொழுது இதில் இருந்து கூறுவது என்னவென்றால் திமுகவும் குடும்ப அரசியலை பண்ணுகிறது.

திமுக பண்ணுவது குடும்ப அரசியல்...
திமுக பண்ணுவது குடும்ப அரசியல்…

எப்படி ஸ்டாலினை கருணாநிதி கட்சியில் வளத்தாரோ அதேபோல் ஸ்டாலின் உதயநிதியை வளர்க்க ஆரம்பித்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் நடப்பது மக்கள் ஆட்சி மன்னர் ஆட்சி அல்ல அதை ஒரு போதும் மறந்துவிடாதீர்கள். குடும்ப அரசியல் செய்த யாரும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவில்லை. அதற்கு ஆதாரம் காங்கிரஸ் கட்சி. மக்கள் ஆட்சி என்பதால் இந்த பயணம் தொடராது விரைவில் முடிந்துவிடும், காங்கிரஸ் கட்சியினால் எப்படி பாஜகவை எதிர்க்க முடியவேயில்லை அதேபோல தான் திமுகவுக்கும் நடக்கும். வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பேர் வாய்ப்பில்லை காரணம் குடும்ப அரசியல். காங்கிரஸ் கட்சிக்கு வேறு யாராவது தலைமை ஏற்றால்தான் தான் வெற்றி பெற வாய்ப்புண்ண்டு இல்லையெனில் கஷ்டம் தான். காங்கிரஸ் கட்சியில் இருந்த 23 பேர்கள் சோனியா மீது அவரை எதிர்த்து நோட்டீஸ் அனுப்பினாரோ அப்போவே காங்கிரஸ் கட்சியின் ஆட்டம் முடிந்துவிட்டது. அப்பொழுதே அவர்கள் சுதார்கமழ் விட்டதால்தான் இப்பொழுது அவர்களுக்கு அந்த நிலைமை. அதே நிலைமைதான் இப்பொழுது திமுகவிற்கும் வரபோகிறது. எனவே ஸ்டாலின்க்கு பின் வேறு யாராவது தாலமி கொண்டால்தான் அந்த கட்சியும் வளர்ச்சி அடையும் இல்லெயெனில் திமுகவிற்கு மிக கடினமான சவால்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here