லேடி சூப்பர் ஸ்டார் தந்தைக்கு உடல்நலக்குறைவு…!தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!!

0

தமிழ் திரையுலகில் லேடி ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா அவர்கள். இவர் கேரள மாநிலத்தை பிறப்பிடமாக கொண்டவர். இந்நிலையில் இவரின் தந்தை  குரியன் கொடியட்டு உடல்நலக்குறைவால் அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மலையாள திரைதுறை மூலம் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதன் பிறகு தமிழில் சரத்குமாரின்  ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்து உள்ளார். மேலும் திரையிலகில் தனக்கென ஒரு ஸ்டைல் வைத்து கொண்டு அதே பாதையில் முன்னேறியவர். இவரின் திறமை மற்றும் உழைப்பினால்  இவரை அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். மேலும் இவருடன் ஜோடி சேர்வது பல வளரும் நடிகர்களின் கனவாக உள்ளது.

இந்நிலையில், நயன்தாராவின் குடும்பம் கேரளாவில் உள்ள கொச்சி மாநிலத்தில் வசித்து வருகிறது. தற்போது நயன்தாராவின் தந்தையும்  ஓய்வு பெற்ற இந்திய விமானப்படையின் அதிகாரியுமான குரியன் கொடியட்டு சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று இவரின் உடல்நிலை மிக மோசமடைந்ததால்  கேரளாவில் உள்ள  தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here