இப்படி ஒரு சான்ஸ மிஸ் பண்ணிட்டிங்களே திரிஷா – குமுறும் ரசிகர்கள்!!

0

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் பட்டை கிளப்பின ‘ஆடுகளம்’ படத்தில் நடிகை டாப்ஸிக்கு முன்பாக திரிஷா நடித்து வந்தார். இந்த பட வாய்ப்பை தவறவிட்ட காரணத்தினால் திரிஷா இன்னமும் வருந்திக்கொண்டிருக்கிறாராம்.

நடிகை திரிஷா

வெற்றிமாறன் திரைப்படம் என்றால் அதில் நடிப்பதற்கு நடிகர்களும் சரி நடிகைகளும் சரி வரிசையில் காத்து கிடக்கிறார்கள். அப்படிப்பட்ட இயக்குனரின் திரைப்படத்தை மிஸ் செய்து விட்டோமே என்ற வருத்தம் இன்னமும் நடிகை திரிஷாவுக்கு இருக்கிறதாம். நடிகர் தனுஷ் மற்றும் டாப்ஸி நடிப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்னாக வெளியானது ‘ஆடுகளம்’ திரைப்படம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ், டாப்ஸி ஆகியோர் நடித்துள்ளனர். 2011ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசையமைப்பாளர் உட்பட பல விருதுகளை குவித்தது. ஆடுகளம் படத்தில் ஜி.வி.பிரகாஷும் இசையில் வேற லெவலில் மிரட்டியிருப்பார்.

தயவுசெய்து கொஞ்சம் சிரிங்க பாஸ் – இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம்!!

இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் இன்று வரை மக்கள் மனதில் புதிதாக கேட்பது போல ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆடுகளம் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்துள்ள ரோலில் நடிக்க முன்னதாக திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த திரைப்படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நடிகை திரிஷா நடித்தும் வந்தார்.

என்ன காரணமோ தெரியவில்லை பாதி படப்பிடிப்பின் போதே நடிகை திரிஷா ஆடுகளம் திரைப்படத்திலிருந்து விலகினார். இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் ஆடுகளம் திரைப்படத்தை மிஸ் செய்துவிட்டோமே என்ற வருத்தத்தில் இருக்கிறாராம் நடிகை திரிஷா. போனது போகட்டும், வந்த வேலையை பார்ப்போம் என திரிஷாவின் நெருங்கிய வட்டாரங்கள் திரிஷாவுக்கு ஆறுதல் கூறிவருகிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here