தயவுசெய்து கொஞ்சம் சிரிங்க பாஸ் – இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம்!!

0

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் சந்தோசம் தான். அந்த வகையில் இன்று, மார்ச் 20ஆம் தேதி எல்லாரும் அவரவர் கவலைகளை மறந்து சந்தோசமாக இருக்கும் சர்வதேச மகிழ்ச்சி நாள்.

சர்வதேச மகிழ்ச்சி தினம்

இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. மகிழ்ச்சி என்றால் சந்தோசம். சந்தோசம் என்றால் சிரிப்பு. இந்த மகிழ்ச்சி, சந்தோஷம் அப்படின்றது நாம தேடிப்போய் கண்டுபிடிப்பதோ, அல்லது மற்றவர்கள் நமக்கு தருவதோ அல்ல. பொதுவாக நம்மை சுற்றியிருக்கும் விஷயங்களே நமக்கு மகிழ்ச்சி என்றால் என்ன என்பதை சொல்லிக்கொடுக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒவ்வொரு நாளும் வேலை காரணமாகவோ, படிப்பு காரணமாகவோ நாம் எல்லாரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்போம். அப்பொழுது நம்மை சுற்றியிருக்கும் சில மகிழ்ச்சியான விஷயங்களை கவனிக்க, ரசிக்க மறந்து விடுகிறோம். எனக்கு ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கு இதுல ரசிக்கிறதுக்கு எங்க நேரம் இருக்கு என நினைக்கலாம். நமக்கு இருக்கும் வேலைகள், ஸ்ட்ரெஸ் இதெல்லாம் நாம் தேடிக்கொண்டது தான். அதுவாக நம்மை தேடி வரவில்லை.

2021 கொரோனா ஆண்டு தானா?? இந்தியாவில் 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!!

அதேபோல தான் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நாம் தேடிக்கொள்வது தான். அதுவாக நம்மை தேடி வராது. முதலில் உங்களை நீங்களே சந்தோசமா வச்சுக்கோங்க. நமக்கு தெரியும் நம்மை எது ரொம்ப யோசிக்க வைக்குது, ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக வைக்குதுன்னு. இதெல்லாத்தையும் விட்டு கொஞ்சம் விலகி இருங்க. உங்க வாழ்க்கை அழகாக மகிழ்ச்சியாக மாறும். இப்போ யாராவது வந்து நீங்க எப்படி இருக்கீங்க, அப்படின்னு உங்களிடம் கேட்டால், எதோ இருக்கேன் என்பது தான் அதிகமானவர்கள் சொல்லும் பதிலாக இருக்கும்.

உங்க சூழ்நிலை எப்படி இருந்தாலும், எவ்வாறு இருந்தாலும் நான் சூப்பரா இருக்கேன் என்று சொல்லிப்பாருங்களேன், எல்லாவற்றையும் சமாளிக்கும் அளவுக்கு புது புத்துணர்ச்சி கிடைக்கும். அதே போல இல்லாதவற்றை நினைத்து கவலைப்படுவதை விட இருப்பவற்றை சந்தோசமாக ஏ