உதயநிதி ஸ்டாலினை தோற்கடிக்க பணப்பட்டுவாடா – அதிமுகவின் சதியா??உதயநிதியின் திட்டமா??

0

தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் மிக பரபரப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் திமுகவின் உதயநிதி ஸ்டாலினை தோற்கடிக்க பணப்பட்டுவாடா நடந்துள்ளது. அதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின்:

தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. தற்போது வேட்பு மனு பரிசீலினை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் போட்டியிடுகிறார். அவர் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து தொடக்கத்தில் இருந்தே பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பலர் வாரிசு அரசியல் திமுக செய்கிறது என்றும் குற்றம் சாட்டி வந்தனர். இதுபோல் பல சர்ச்சை தொடர்ந்து கிளம்பி வந்தது. தற்போது அந்த வகையில் மற்றும் ஓர் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. அதுஎன்னவென்றால் முதல் முறையாக தேர்தலில் களம் காணும் உதயநிதி ஸ்டாலினை தோற்கடிக்கும் வகையில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது.

இப்படி செஞ்சாவது கொரோனா குறையுமா?? சென்னையில் 30 லட்ச பேருக்கு தடுப்பூசி வழங்க இலக்கு!!

தற்போது அதற்கான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை அதிமுக கட்சி செய்திருக்க அதிக வாய்ப்புள்ளதாக திமுகவினர் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் சிலர் இது உதயநிதி ஸ்டாலின் தனக்கு செய்யும் விளம்பரம் என்றும் கூறி வருகின்றனர். இதன் உண்மை தன்மை தேர்தலுக்கு முன்பே வெளியானால் தேர்தல் முடிவுகளில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here