திரிஷா, நயன்தாரா இல்லையென்றால் அந்த படங்கள் எப்படி இருக்கும் – மஞ்சிமா மோகன்..!

0
manjima-mohan
manjima-mohan

எந்த படத்தையும் ஹீரோயின் சப்ஜெக்ட் படம் பெண்கணை மையப்படுத்திய படம் என்று குறிப்பிடாதீர்கள் என்று மஞ்சிமா மோகன் கூறியுள்ளார்.

நடிகை மஞ்சிமா மோகன்..!

manjima-mohan
manjima-mohan

மஞ்சிமா மோகன் தமிழில் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம் போன்ற படங்களில் நடித்தவர். தற்போது அவர் சில படங்களில் நடித்து வருகிறார். எந்த படத்தையும் ஹீரோயின் சப்ஜெக்ட் படம், பெண்கணை மையப்படுத்திய படம் என்று குறிப்பிடாதீர்கள் என்கிறார்.

எனக்கு உடன்பாடில்லை..!

Ponmagal-Vandhal-Penguin
Ponmagal-Vandhal-Penguin

இது குறித்து அவர் பொன்மகள் வந்தாள், பெண்குயின் படங்களை பெண்களை மையப்படுத்திய படங்கள் என்று குறிப்பிடுகிறார்கள் இதில் எனக்கு உடன்பாடில்லை என்றும் கதையின் மைய புள்ளியாக பெண்கள் இருந்தாலோ அல்லது ஹீரோ என்று ஒருவர் இல்லாவிட்டாலோ மட்டும் அது பெண்களை மையப்படுத்திய படம் அல்ல என்று கூறியுள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஆணுக்கும், பெண்ணுக்கும் சம பங்கு உண்டு..!

Trisha-Nayanthara
Trisha-Nayanthara

நயன்தாரா நானும் ரவுடிதான் படத்திலும், திரிஷா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இல்லாமல் இருந்தால் அந்த படங்கள் எப்படி முழுமை அடைந்திருக்கும். மேலும் ஹீரோயின் மட்டுமே நடித்தால் அந்த படங்கள் பெண்களை பெருமைப்படுத்தும் படமாகி விடாது என்றும் ஒரு படத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம பங்கு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here