தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன், அன்று முதல் இன்று வரை ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது, இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ரஜினியின் நண்பராக நடிக்கப்போகும் நடிகர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இப்படத்தில் நடிகர் சத்யராஜ் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே இருவரும் மிஸ்டர்.பாரத் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், 38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையவுள்ளனர். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
புதுமைப்பெண் திட்டத்தால் 34% மாணவிகளின் சேர்க்கை அதிகரிப்பு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!!