Tuesday, May 21, 2024

“ஹிந்தி தெரியாது போடா” ஹேஷ்டேக் – திருப்பூர் நிறுவனங்கள் தயாரிக்கும் டீ ஷர்டுகளுக்கு “மவுஸ்”!!

Must Read

கடந்த சில நாட்களாக அதிகமாக ட்ரெண்டாகி வந்த “ஹிந்தி தெரியாது போடா” என்ற ஹேஷ்டேக்கை மையப்படுத்தி டீ-ஷர்டுகள் தயாரிக்கப்பட்டு வந்தன, அதனை அடுத்து அந்த டீ-ஷர்டுகள் அதிகமாக விற்பனையானதால் திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

ட்ரெண்ட் ஆன ஹேஷ்டேக்:

சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தினை மையப்படுத்தி சில நாட்களுக்கு அந்த விஷயங்கள் ட்ரெண்டாகும். அதிலும் குறிப்பாக ட்விட்டர் தளத்தில் அனைவரும் தங்களது கருத்துக்களை சமூகம் அறிய பதிவு செய்வர். அப்படி கடந்த சில நாட்களுக்கு முன் எம்.பி. கனிமொழி தன்னை ஒரு விமானநிலைய அதிகாரி ஹிந்தி தெரியவில்லை என்பதற்காக அவமானப்படுத்தினார் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

அதே போல் தமிழ் திரையுலக இயக்குனரான வெற்றிமாறன் தானும் ஹிந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமானத்தை சந்தித்தாக கூறினார். இது அனைவர் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இதனையடுத்து, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தனா போன்றோர் சமூகவலைத்தளத்தில் இந்த ஹிந்தி திணிப்பு விவாகரத்திற்கு பதில் தரும் விதமாக “ஹிந்தி தெரியாது போடா” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ-ஷர்டை அணிந்து போட்டோ பதிவிட்டு வந்தனர். இது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.

தயாரிப்பு நிறுவனங்கள் மகிழ்ச்சி:

அனைவர் மத்தியிலும் பேசப்பட்டதால் திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ-ஷர்டுகளை தயாரித்தனர். இதனை அதிகமானோர் வாங்கியதால் தற்போது நிறுவனங்களுக்கு நல்ல மவுஸ் கிடைத்துள்ளது.

அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர்!!

tirupur t shirt production
tirupur t shirt production

இந்த கொரோனா காலத்தில் கஷ்டப்பட்ட ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக இது உள்ளது. ஒரு டீ-ஷர்டு 200 ரூபாய் என்று விலை நிர்ணயித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் கிடைப்பதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்ததை நாம் அறிவோம். ஆனால் தற்போது தினசரி சந்தைக்கு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -