9 கிலோ வரை தனது எடையை குறைத்த ஆலியா மனசா – வைரலாகும் வீடியோ!!

0
alya manasa
alya manasa

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமான ஆலியா மனசா அவருடன் நடித்த சஞ்சீவை காதல் திருமணம் செய்துகொண்டார். இதனை அடுத்து இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை பிறந்ததால் உடல் பருமனான ஆலியா மனசா 9 கிலோ வரை தனது எடையை குறைத்துளார். தற்போது விஜய் டிவி சீரியலில் நடிக்க உள்ளார்.

ஆலியா மனசா

தனது 17 வயதில் மாடலிங் துறையில் கால் பதித்த ஆலியா மனசா அதன்பிறகு 2015 இல் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் தன்னுடன் இணைந்து ஆடிய மானஸ் என்பவரை காதலித்து வந்தார். ஆனால் அதன்பிறகு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அந்த காதல் தோல்வி அடைந்தது. ஆலியாவிற்கு விஜய் டிவியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராஜாராணி சீரியல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். அதில் தனது ஜோடியான சஞ்சீவ் என்பவரை காதலித்து 2019 இல் திருமணமும் செய்துகொண்டார்.

தற்போது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் உடல்பருமனால் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ஆலியா மனசா தற்போது 9 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் விஜய் டிவி ஒரு புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எடை குறைத்ததன் ரகசியம் பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ரகசியத்தை கேட்ட ரசிகர்களுக்கு கிக்பாக்ஸிங் கற்று கொண்டதாகவும், மேலும் உடற்பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here